பொலிஸ் சார்ஜன்ட் குடும்பத்தினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதல்: ஆனமடுவவில் சம்பவம்!

Published By: Vishnu

11 Dec, 2022 | 11:43 AM
image

பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணித்த கார் ஆனமடுவ தத்தேவ குளத்துக்கு  அருகில்  தாக்குதலுக்கு இலக்கானதாக  தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவரது மனைவியின் தாயாரும் தாக்கப்பட்டதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஆனமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது மனைவி,  பிள்ளைகள் மற்றும் மனைவியின் தாயாருடன் பொலிஸ் சார்ஜன்ட்  ஆனமடுவ நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் காரை  நிறுத்தியுள்ளனர். 

பின்னர் இந்த மூவரும் காரிலிருந்தவர்களை வாகனத்திலிருந்து வெளியே இழுத்துத்  தாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் மூவரும்  மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதுடன் தலைக்கவசம் மற்றும் கை, கால்களால் தாக்கியுள்ளதாகவும்  பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது!

2025-01-25 11:40:26
news-image

அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

2025-01-25 11:24:21
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி ; கடந்த...

2025-01-25 11:20:39
news-image

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ;...

2025-01-25 11:00:29
news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 12:03:28
news-image

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

2025-01-25 10:38:26
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02
news-image

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு...

2025-01-25 09:36:14
news-image

ஜனாதிபதி கீழ் நிலைக்கு செல்வாரென்று எதிர்பார்க்கவில்லை...

2025-01-25 08:43:57