லஞ்சக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்ற உப தலைவர் உட்பட ஐவர் பெல்ஜியத்தில் கைது ! 23 கோடி ரூபா பணம் மீட்பு

Published By: Sethu

11 Dec, 2022 | 11:06 AM
image

வளைகுடா நாடொன்றுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உப தலைவர்களில் ஒருவரான ஈவா கெய்லி, முன்னாள் உறுப்பினர் ஒருவர் உட்பட ஐவரை பெல்ஜிய பொலிஸார் நேற்றுமுன்தினம் (09) கைது செய்துள்ளனர்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் கத்தார் மீது மறைமுகமாக குற்றம் சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள் தொடர்பில் இவரகள் கைது செய்யப்பட்டுள்ளாக  செய்தி வெளியாகியுள்ளது. 

44 வயதான ஈவா கெய்லி, முன்னாள் தொலைக்காட்சி ஊடகவியலாளரான கிறீஸ் பிரஜையாவார்.

2014 ஆம் ஆண்டு முதல் அவர் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார். அப்பாராளுமன்றத்தின் 14 உப தலைவர்களில் ஒருவராக கடந்த ஜனவரி மாதம் அவர் தெரிவாகியிருந்தார்.

கைது செய்யப்பட்ட ஏனைய நால்வரும் இத்தாலிய பிரஜைகள் அல்லது இத்தாலியிலிருந்து வந்தவர்கள் என இவ்விவகாரத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. 

இவ்விசாரணைகள் தொடர்பில் பெல்ஜியத்தின் தலைநகர், பிரசல்ஸில் 16 இடங்களில் சோதனைகள் நேற்றுமுன்தினம்  நடத்தப்பட்டதாக பெல்ஜிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இச்சோதனைகள் மூலம் 600,000 யூரோ (சுமார் 23 கோடி இலங்கை ரூபா/ 5.2 கோடி இந்திய ரூபா) பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கணினிகள், தொலைபேசிகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை ஆய்வுக்குட்படுத்தப்படும் எனவும் அறிக்கையொன்றில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமான டிசெம்பர் 9 ஆம் திகதி இம்முற்றுகைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈவா கெய்லி

ஐரோப்பிய பாராளுமன்றத்தின், பொருளாதார மற்றும் அரசியல் தீர்மானங்களில் வளைகுடா நாடொன்று செல்வாக்கு செலுத்தியதாக விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர் எனவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் செல்வாக்குள்ள நபர்களுக்கு பெருந்தொகைப் பணம் அல்லது அன்பளிப்புகளை வழங்குவதன் மூலம் இது செய்யப்பபட்டதாக குற்றம்சுமத்தப்படுகிறது என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

மேற்படி நாடு எது என்பதை பெல்ஜிய அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.  ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இவ்விசாரணைகள் கத்தார் தொடர்பானது என பெல்ஜிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்தாலிய சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, ஐரோப்பிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவரை  ஊழலில் ஈடுபட வைப்பதற்கு கத்தாரினால் முயற்சிக்கப்படுவதாக இவ்விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை விசாரணைகளுடன் தொடர்புடைய வட்டாரமொன்று உறுதிப்படுத்தியதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது. 

லூகா விசேன்தினி

மேற்படி முன்னாள் உறுப்பினர் பியர் அன்டோனியோ பான்ஸேரி  என பெல்ஜிய ஊடகங்களான 'ல சுவார்' மற்றும் 'நெக் ஆகியன குறிப்பிட்டுள்ளன. 67 வயதான பான்ஸேரி 2004 முதல் 2019 வரை ஐரோப்பிய நாடாளுன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.

சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் நாயகமான இத்தாலியைச் சேர்ந்த லூகா விசேன்தினியும் கைது செய்யப்பபட்டுள்ளார் என பெல்ஜியத்தின் 'ல சுவார்' பத்திரிகை தெரிவித்துள்ளது. இச்செய்திகள் தொடர்பாக தான் அறிந்துள்ளதாக அச்சம்மேளனம் கூறியுள்ளது. ஆனால் மேலதிக கருத்து எதையும் வெளியிடவில்லை.

ஈவா கெய்லியின் துணைவர் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் ஆகியோரும் கைதியாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் கத்தார் மீது தொழிலாளர் பாதுகாப்பு, மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் தனது தனது விம்பத்தை சிறப்பாக்குவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டது. இப்பின்னணியில் மேற்படி ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

 அன்டோனியோ பான்ஸேரி 

உலகக்கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு முன்னர் கத்தாரின் தொழிலாளர் அமைச்சர் அலி பின் சமிக் அல் மாரியை ஈவா கெய்லி சந்தித்திருந்தார். 

அரேபிய உலகக் கிண்ணமானது அரசியல் பரிணாமங்களுக்கு மறுசீரமைப்புகளுக்கும் சிறந்த கருவியாக அமையும் என தான் நம்புவதாகவும், தொழிலாளர் மறுசீரமைப்பு விடயங்களில் கத்தாரின் முன்னேற்றத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகரித்து கௌரவிப்பதாகவும் ஈவா கெய்லி கூறிய வீடியோ வெளியாகியிருந்தது.

நவம்பர் இறுதியில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றுகையில், அப்பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் சிலர், கத்தாரை வெருட்டுவதாகவும் கத்தாருடன் பேசுகின்றன அல்லது தொடர்புடைய அனைவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதாகவும் கூறியிருந்தார்.

ஈவா கெய்லி கைது செய்யப்பட்டதையடுத்து அவரை தமது கட்சியிலிருந்து நீக்குவதாக கிரேக்க சோஷலிஸ்ட் கட்சியும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சோஷலிஸ மற்றும் ஜனநாயகக் முற்போக்குக் கூட்டணியும் அறிவித்துள்ளன. (சேது)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயற்சி

2024-04-20 11:42:55
news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08