கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத்தந்த கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுமார் 800 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

குவாடோர் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த குறித்த கொக்கைன் போதைப்பொருள் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கொக்கைன் சுமார் 1200 கோடி பெறுமதியானது என போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.