மட்டக்களப்பு - திருமலை வீதியில் உள்ள இரண்டு வீடுகளின்  கதவுகளை உடைத்து நேற்று (08) இரவு கொள்ளையடிக்கப்பட் டுள்ளது.

இரண்டு வீட்டு கதவுகளும்  உடைக்கப்பட்டு, தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில்  தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குற்றவாளிகளை மோப்ப நாய்களின் உதவியுடன் மட்டக்களப்பு போலிஸார் தேடிவருவதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.