மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பெண்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 5

10 Dec, 2022 | 05:45 PM
image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு 'விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம்' எனும்தொனிப் பொருளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழமை (10) காந்திபூங்காவிற்கு முன்னால் பெண்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி அமையத்தின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற இந்த கவனயீர்பு போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு 2023 ம் ஆண்டு முன்மொழியப்பட்ட தேசிய பாதீட்டில் விசேட தேவையுள்ள  நபர்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாகொடுப்பனவை குறைப்தாக எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று காரணமாக விசேட தேவையுள்ள பெண்கள் இழந்துள்ளனர். எனவே  2023 ம் பாதீட்டில் பொருளாதார  அபிவிருத்தி திட்டம் ஒன்றை முன்மொழிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விசேட தேவையுடைய பெண்கள் பிள்ளைகள் மற்றம் அவர்களில் தங்கிவாழும் முதியவர்கள்  நாளாந்த உணவு தட்டுபாடு எதிர்கொள்வதுடன் போசாக்கு சுகாதார பிரச்சனைக்கு முகம் கொடுத்துவருகின்றனர். எனவே விசேட தேவையுடைய பெண்களது குடும்பங்களுக்கான புதிய தொரு மேம்பாட்டு உணவு பாதுகாப்பை அமுல்படுத்தவேண்டும்.

அவ்வாறே மருந்து தட்டுப்பாடு இல்லாமல்  சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். 

விசேட தேவையுள்ள பெண்கள் இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கும் சமூகத்தில் கௌரவமான வாழ்கை முறையை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தையும் இழப்புpட்டிற்கான ஆணைக்குழு முன்னெடுக்கவேண்டும் என்ற 5 கோரிக்கைகள்  உள்ளடங்கலாக  விசேட தேவையுள்ள பெண்களுக்கான மாதாந்த கொடுப்பனவை குறைக்காதே, விசேட தேவையுள்ள பெண்களுக்கு சர்வதேச ரீதியான இழப்பீடு தேவை, கைசாத்திட்டபடி இலங்கையில் ஜ.சி.ஆர்.பி.டி யை அமுல்படுத்துங்கள், சமூக நலன் திட்டம் தேவை.

விசேட தேவையுள்ள பெண்களுக்கு உணவு பாதுகாப்பு திட்டம் தேவை, பொதுச்சேவை வழங்கிய விசேட தேவையுடைய பெண்களுக்கு பாரபட்சம் காட்டாதே, மாற்றுத்திறனாளிகளின் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் கைவைக்காதே, போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு காலை 9.30 மணிமுதல் 11 மணிவரை தமது கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் விழிப்புணர்வு தெரு நாடகம் ஒன்றை நடாத்திய பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களுடன் இவ்வருடத்தில்...

2024-09-09 11:46:28
news-image

பாக்குமரம் வெட்டிய இளைஞன் தவறி விழுந்து...

2024-09-09 11:40:22
news-image

விசா விவகாரத்தினால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஆபத்து...

2024-09-09 11:50:40
news-image

மோட்டார் சைக்கிள் - வேன் மோதி...

2024-09-09 11:28:56
news-image

பாணந்துறை கடலில் மூழ்கி இளைஞன் மாயம்

2024-09-09 11:12:58
news-image

சஜித்திற்கு ஆதரவு குறித்து எந்த குழப்பமும்...

2024-09-09 10:56:33
news-image

ஜா எலயில் ரயில் - கார்...

2024-09-09 10:35:33
news-image

வவுனியா குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திற்கு...

2024-09-09 10:28:46
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் ரயில் நிலைய அதிகாரி,...

2024-09-09 09:58:01
news-image

களுத்துறை சிறைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற...

2024-09-09 09:48:51
news-image

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் படுகாயம்

2024-09-09 11:20:56
news-image

தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்...

2024-09-09 09:43:10