கண்டி - அலவத்துகொடை பகுதியில் சிறிய ரக வாகனெமொன்றிலிருந்து 75 இலட்சம் ரூபா பெறுமதியான  சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.