வவுனியாவில் சாதாரண தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா உலுக்குளம் பொலிஸ் வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்ற போது, பரீட்சாத்திக்கு பதிலாக மற்றுமொரு நபர் பரீட்சை எழுதியுள்ளார்.

குறித்த நபரின் செயற்பாடு தொடர்பில் சந்தேகமடைந்த பரீட்சை கண்காணிப்பாளர்கள் உடனே உலுக்குளம் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

 ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்காக குறித்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு   வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.