தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை அட்டாம்பிட்டி பகுதியில் இன்று காலை பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 கூட்டு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யுமாறும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனவும் கோரி டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'கூட்டு ஒப்பந்தம் எமக்கு வேண்டாம், ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு, தொழிலாளர்களை காட்டி கொடுக்காதே, சந்தாவை நிறுத்து" என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.