கொரியா வழங்கிய 43 கோடி ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்களுக்கான ஆவணம் சுகாதாரத்துறை அமைச்சரிடம் கையளிப்பு

Published By: Nanthini

10 Dec, 2022 | 12:03 PM
image

ட்டப்படாத மக்களுக்கான சர்வதேச பணியகத்தின் பூரண அனுசரணையில் கொரியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 43 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களுக்கான ஆவணங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த பணியகத்தின் இலங்கைக்கான அமைப்பாளரான பிரான்சிஸ் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் ஆகியோரால் மேற்படி ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக சங்கத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மருந்துப் பொருட்களுக்கான அனுசரணை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறுகையில்,

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியானது சுகாதாரத்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இலங்கையில் பற்றாக்குறை நிலவும் மருந்துப் பொருட்களில் ஒரு பகுதியை 'எட்டப்படாத மக்களுக்கான சர்வதேச பணியகம்' பெற்றுக்கொடுத்துள்ளது. 

கொரியாவிலிருந்து 43 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் கப்பல் ஊடாக வரவழைக்கப்பட்டுள்ளன.

இது குறித்த ஆவணங்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வுதவிக்கு முழுமையாக ஆதரவளித்த 'எட்டப்படாத மக்களுக்கான சர்வதேச பணியகத்தின்' இலங்கை அமைப்பாளர்  பிரான்சிஸுக்கு மலையக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22