யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடத்திய 'போதைப்பொருள் பாவனையும் அதன் பல்வகை கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு நேற்று வெள்ளிக்கிழமை (டிச. 9) பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவும், சிறப்பு விருந்தினராக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரனும் கலந்துகொண்டனர்.
இதன்போது 'தற்காலத்தில் போதைப்பொருள் பற்றிய நிலவரமும் அது தொடர்பான எமது நடவடிக்கைகளும்' என்ற விடயத்தை பற்றி வைத்தியர் க.குமரனும், 'மனித உரிமைகளும் போதைப்பொருளுக்கு அடிமையாதலும்' பற்றி முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனும், 'போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பான சட்டம் சார்ந்த ஓர் அறிமுகம்' பற்றி குற்றவியல் நீதிமன்ற நீதவான் அ.ஆனந்தராஜாவும், 'போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் உளவியல் அம்சங்கள்' பற்றி யாழ் போதனா வைத்தியசாலை மனநல வைத்திய நிபுணர் டி.உமாகரனும் கருத்துரைகளை வழங்கினர்.
அத்துடன் கருத்துரைகளை வழங்கிய நால்வருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM