கம்போடியா நாட்டில் விஷம் கலந்த அரிசி வகை மதுவை அருந்தியதால் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கம்போடியா நாட்டின் கம்போங் சினங் மாகாணத்தை சேர்ந்த கிராமம் ஒன்றில் மர்மமான முறையில் தொடர்ச்சியான மரணம் நிகழ்ந்து வருகிறது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட அரிசி வகையிலான மதுவை உட்கொண்டே இவர்கள் இறப்புக்கு காரணம் என்று மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பாரம்பரிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விஷம் கலந்த மதுவை அருந்தியர்கள் நவம்பர் மாதம் இறுதியில் இருந்து தொடர்ச்சியாக உடல்நலம் குன்றி உயிரிழந்த வருகின்றனர். இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.

50 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக வடகிழக்கு கம்போடியாவில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக விஷம் கலந்த மது அருந்திய 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.