குழந்தையொன்றுக்கு  தந்தையாக விரும்பும் ஆண்கள்  வீடுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும்  பிளாஸ்டிக்  பொருட்களிலிருந்து விலகியிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பிளாஸ்டிக்கில் காணப்படும் இரசாயனங்கள்  தாயின் கருப்பையில் விருத்தியாகி 5  நாட்கள் மட்டுமேயான சிசுக்களில்   பாதிப்பை ஏற்படுத்தி  உடல் குறைபாடுகளை ஏற்படுத் துகின்றமை  கண்டறியப் பட்டதாக அமெரிக்க மஸாசுஸெட்ஸ் பல் கலைக்கழகத்தால்  மேற் கொள்ளப்பட்ட புதிய ஆய்வு கூறுகிறது.

மேற்படி பாதிப்புக்கு கர்ப்பமடைந்த பெண்க ளின்  பிளாஸ்டிக்  பாவனை காரணமாக அல்லாது தந்தையின் விந்தணுக்கள் பிளாஸ்டிக் கிலுள்ள  பதலேட்கள் என அழைக்கப்படும் இரசாயனத்தால் பாதிக் 

கப்பட்டமையே காரணமாக உள்ளமை தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மேற்படி விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற சுமார் 99  சதவீத  வயதுவந்தவர்கள் பதலேட் இரசாயனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அவர்கள் கூறுகின்றனர்.