கோட்டா கோ கம மீதான தாக்குதல் : முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா வழக்கிலிருந்து விடுவிப்பு

Published By: Digital Desk 3

10 Dec, 2022 | 09:00 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

காலி முகத்திடலில்  அமையப் பெற்றிருந்த “கோட்டா கோ கம” போராட்ட  களத்தின் மீதான தாக்குதல் தொடர்பில்  தாக்கல் செய்யப்பட்ட  05 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும்  விசாரணைக்கு  ஏற்பதாக உயர் நீதிமன்றம் இன்று ( 9) அறிவித்தது.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல்  “கோட்டா கோ கம ” போராட்டத் களத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள்  மீறப்பட்டுள்ளதாக  கூறி லஹிரு சானக்க உள்ளிட்ட 05 சமூக செயற்பாட்டாளர்களால் இந்த 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர்  நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பரிசீலிக்கப்பட்டது.  இதன்போதே மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இதன்படி,  மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சனத் நிஷாந்த, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரை எதிர்வரும் 2023 ஜூன்  22 ஆம் திகதி நீதிமன்றுக்கு விளக்கமளிக்குமாறு  உயர் நீதிமன்றம் அறிவித்தலும் பிறப்பித்தது.

அமைதிப் போராட்டங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க உத்தரவு பிறப்பிக்கவும், அது தொடர்பிலான  வழிகாட்டுதல்களை தயாரிக்கவும் பொலிஸ் மா அதிபருக்கு கட்டளை இடுமாரும் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் ஊடாக கோரப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த மனுவில் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அவருக்கு எதிராக விசாரணைகளை நடத்த எதிர்பார்க்கவில்லை என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதன்படி,  முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை வழக்கு நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி...

2024-06-13 22:29:31
news-image

ரணிலின் வேலைத்திட்டமே சர்வதேச நாணய நிதியத்தின்...

2024-06-13 16:48:39
news-image

பயங்கரவாதிகள் போல் செயற்படுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க...

2024-06-13 16:54:47
news-image

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்புக்கு...

2024-06-13 20:54:34
news-image

நாளை 2 மணிக்குள் சாதகமான பதிலின்றேல்...

2024-06-13 17:35:08
news-image

நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல்...

2024-06-13 20:19:38
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய...

2024-06-13 19:53:18
news-image

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி...

2024-06-13 19:07:27
news-image

'கிழக்கை மீட்போம்' என மட்டக்களப்பை சூறையாடியவர்கள்...

2024-06-13 23:13:45
news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27
news-image

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி...

2024-06-13 17:33:18