மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தில் நான்கு புள்ளிகள் காணப்படுகிறன. இது எதற்காக என்று கேள்வியுடன் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறந்தவர்களின் உடல் பல நாட்கள் கெடாமல் இருக்கச் செய்யும் பதனிடும் முறை. எம்பால்மிங் என்ற வேதியியல் முறையில் சிகிச்சை அளிக்கப்படும். 

உடல் கெடாமல் இருக்கும். அதற்கான அடையாளம் தானா இது அல்லது அவர்களது குடும்ப வழக்கப்படி முதல்வர் இறந்த பின்னர் அவருக்கு ஏதாவது சடங்கு செய்யும்போது, முகத்தில் கரும்புள்ளிகள் ஏதாவது வைக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் கடந்த திங்கள் கிழமை இரவு 11.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் என்று அந்த மருத்துவமனை அறிவித்தது. ...

நீண்ட சிகிச்சைக்குப் பின்னர், பலனின்றி இறந்தார் என்று கூறப்பட்டது. இதையடுத்து, அவரது உடம்பு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டது. 

இந்த சடங்கின்போது, ஜெயலலிதாவுக்கு நெருங்கியவர்கள் யாரும் இல்லை என்ற செய்தி வெளியானது. பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்தான் சடங்குகள் செய்தார் என்று கூறப்பட்டது....

இந்த சடங்கின்போது அவரது முகத்தில் நான்கு புள்ளிகள் வைக்கப்பட்டதா? அல்லது உடல் கெடாமல் இருக்க எம்பால்மிங் செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

இந்தப் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடல் கெடாமல் இருக்க என்றால் இறந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டார் ஜெயலலிதா. பிறகு ஏன் அந்த நான்கு புள்ளிகள் என்ற கேள்வி எழுந்துள்ளது.