மட்டக்களப்பில் சுயதீனமாக ஒன்றிணைந்த பெண்கள் உண்மையை நோக்கிய நியாயப் பயணம் என்ற தலைப்பில் மட்டு கல்லடி தொடக்கம் காந்திபூங்கா வரையிலாக இடம்பெற்று வரும் கவனயீர்பு தொடர் நடைப்பயணத்தின் 211 நாள் நடைப் பயணம் 08 ஆம் திகதி வியாழக்கிழமை கொட்டும் மழை மற்றும் குளர்காற்றுக்கும் மத்தியில் இடம்பெற்றது.
கடந்த கோட்டா கோ கோம் ஆரம்பமான காலப்பகுதியில் மட்டக்களப்பில் உள்ள பெண்கள் அமைப்புக்கள் மற்றும் வாழ்வாதாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் இணைந்து உண்மையை நோக்கிய நியாயப் பயணம் என்ற தலைப்பில் கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பித்து காந்திபூங்கா வரையும் இந்த தொடர்பயணம் இடம்பெற்று வருகின்றது.
தினமும் காலை 9 மணிக்கு கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பிக்கும் இந்த நடை பயணத்தின் போது தினம் தினம் பல்வேறு வாசகங்கள் கொண்ட சுலோகம் ஏந்தியவாறு காந்தி பூங்காவரை சென்று அங்கு பூங்காவில் உள்ள மரம் ஒன்றிற்கு கீழ் ஏந்திவரப்பட்ட சுலோகங்கள் மற்றும் பதாதைகளை மரத்தில் தொங்கவிட்டு சிறிது நேரம் இளைப்பாறி செல்கின்றனர்.
இந்த நடை பயணம் சீரற்ற கால நிலையினால் ஏற்பட்ட மழை மற்றும் கடும் குளிர் காற்றுக்கு மத்தியிலும் விடாது தமது தொடர் பயணமான 211 நாள் நடை பயணத்தை 08 ஆம் திகதி வியாழக்கிழமை முன்னெடுத்திருந்தனர்.
இதில் கலந்து கொண்ட பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தினக் கூலியாக வேலை செய்துவருபவர்களுக்கு இன்று வேலை வேலை கொடுக்க ஆட்கள் இல்லை வேலை கொடுக்க பணம் இல்லை.
இதனால் ஒவ்வொரு நாளும் கூலிவேலைக்கு சென்று வாழும் குடும்பங்களின் நிலை படு மோசமாக உள்ளது உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே இப்போது இப்படி யென்றால் எங்கள் காலம் போகப் போக எங்கள் வாழ்க்கை எப்படி போகும் என்ற ஒரு பயம் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக அடுத்த வேளை மருந்து பற்றிய, எமது போக்குவரத்து செலவு பற்றிய பயம் போன்ற பல்வேறு பயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே இவ்வாறு நடந்து போகும் போது எமக்கு ஒரு நிம்மதியும் ஆறுதலும் கிடைக்கின்றது அதனால் இன்று இந்த நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றோம். எனவே இந்த நாட்டிலே எங்களுக்குரிய மூன்றுவேளை உணவு மற்றும் பாணும் பருப்பும் தாராளமாக கிடைக்க வேண்டும் அதுவரை இந்த நடைப் பயணம் தொடர்ந்து இடம்பெறும் என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM