ஈரானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பெண்களின் முகங்களையும் உடற்பாகங்களையும் இலக்குவைத்து துப்பாக்கிபிரயோகம் - மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

Published By: Rajeeban

09 Dec, 2022 | 03:34 PM
image

கார்டியன்

ஈரானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள பெண்களின் முகங்களையும் உடற்பாகங்களையும் இலக்குவைத்து ஈரானிய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுவருகின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் தாதிமார்களும் தாங்கள் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக இந்த விடயத்தை மிகவும் இரகசியமாக தெரிவித்துள்ளனர்.

ஆண்களை விட பெண்கள் வித்தியாசமான காயங்களுடன் வருகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக ஒடுக்குமுறை இணையங்கள் மீதான கட்டுப்பாட்டின் காரணமாக மறைக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் கார்டியனிற்கு வழங்கிய படங்கள் பாதுகாப்பு படையினர் பொதுமக்களிற்கு மிக அருகிலிருந்து மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் காரணமாக உடல்முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளதை காண்பித்துள்ளன.

சில படங்கள் உடல்முழுவதும் சிறிய துளைகளைகாண்பித்துள்ளன.

இந்த  காயங்கள் மிகவும் ஆபத்தானவை ஈரானின் இளம் தலைமுறையினர் பலர் நிரந்தரமான உடற்பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படலாம் என பத்து மருத்துவர்கள் கார்டியனிற்கு தெரிவித்துள்ளனர்.

பெண்கள் சிறுவர்கள் குழந்தைகளின் கண்களை நோக்கி சுடுவது வழமையான விடயமாக காணப்படுகின்றது.

அதிகாரிகள் ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு விதத்தில் இலக்குவைக்கின்றனர் என தான் கருதுவதாக இஸ்பஹன் மாநில மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் அவர்கள் பெண்களின் அழகை அழிக்க விரும்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் 20வயது மதிக்கத்தக்க பெண்ணொருவருக்கு சிகிச்சை அளித்தேன் அந்தபெண்ணின் பிறப்புறுப்பை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர் இரண்டு துப்பாக்கி ரவைகள் பிறப்புறுப்பை தாக்கியிருந்தன தொடை பகுதியில் பத்து ரவைகள் காணப்பட்டன அவற்றை இலகுவக அகற்றிவிட்டோம் ஆனால் பிறப்புறுப்பை தாக்கிய துப்பாக்கி ரவைகளை அகற்ற முடியவில்லை என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் தொற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகும் கடும் ஆபத்துள்ளது நான் அவரை பெண்கள் தொடர்பான மருத்துவரை சென்று பார்க்குமாறு கேட்டுக்கொண்டேன் எனவும் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்

தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை பத்துக்கும்மேற்பட்ட பாதுகாப்பு படையினர் தன்னை சூழ்ந்துகொண்டு பிறப்புறுப்பிலும் தொடையிலும் தாக்குதலை மேற்கொண்டனர் அந்த பெண் தெரிவித்தார் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அனுபவத்தினால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஏனைய மருத்துவர்களை போல தன்னை வெளிக்காட்டா விரும்பாதவராக உரையாடினார்.

நான் அனுபவித்த அழுத்தம் வேதனையை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் இருந்தேன். அந்த யுவதி எனது மகளாக கூட இருக்கலாம் என அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் அதிக அச்சத்தை ஏற்படுத்தும் அரசாங்க ஆதரவு பாசிஜ் ஆயுதகுழு போன்றவைகள் கலகம் அடக்குவதற்கான விதிமுறைகளை புறக்கணிக்கின்றனர் உடலின் முக்கிய பாகங்களிற்கு பாதிப்பை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக காலின் கீழ் சுடவேண்டும் என்பதை அலட்சியம் செய்கின்றனர் என மற்றுமொரு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தாழ்வுமனப்பான்மை காரணமாக படையினர் பெண்களின் உடல்பாகங்களை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்கின்றனர் என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07
news-image

தடை செய்யப்பட்ட 67 பயங்கரவாத அமைப்புகள்:...

2025-03-18 10:20:54
news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55