கெரட் சட்னி

Published By: Devika

09 Dec, 2022 | 04:15 PM
image

தேவையான பொருட்கள்

கெரட் - 2

வெ.பூண்டு - 5 பல்

காய்ந்த மிளகாய் - 3

வெங்காயம் - 2

எண்ணெய் - 1 தேக்கரண்டி

இஞ்சி - சிறு துண்டு

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெ.பூண்டு, காய்ந்த‌ மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதக்கியவற்றுடன் கெரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.

நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

அரைக்கும் போது உப்பு சேர்த்து விருப்பப்பட்டால் தேங்காய் சேர்த்து அரைக்கவும். தேங்காய் இல்லாமலும் அரைக்கலாம். (தேங்காய் சேர்த்தால் சீக்கிரம் கெட்டு விடும். தேங்காய் சேர்க்கா­விடில் நீண்ட‌ நேரம் நன்றாக‌ இருக்கும்.)

இதை நன்கு மைய‌ அரைத்து இட்லியுடன் பரிமாறவும். சுவையான‌ வித்யாசமான‌ கெரட் சட்னி தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்