(இராஜதுரை ஹஷான். எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட சொகுசு மெத்தை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடந்த ஜுலை மாதம் 28 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு பொருள் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை பாராளுமன்றம் கொள்வனவு செய்யவில்லை.
தனியார் நிறுவனமொன்றே அதற்கு பணம் செலுத்தி கொண்டு வந்துள்ளது. ஜனாதிபதியின் அலுவலகத்திற்கே அந்த பொருள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களில் ஜனாதிபதியின் பாராளுமன்ற செயலாளரே கையெழுத்திட்டுள்ளார்.
சொகுசு மெத்தை ஒன்றே இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது ஜனாதிபதியின் அலுவலகத்தில் அது இருக்கிறது. அது ஒரு அடிக்கும் அதிகமான உயரம் கொண்டது. இவ்வாறான மெத்தையை ஏன் ஜனாதிபதியின் அலுவலகத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
அங்கே யாரும் தூங்குவதில்லை. அங்கு யாராவது தங்குகிறார்களா? தெரியவில்லை. இது முக்கிய பிரச்சினையாகும். இதனை நாங்கள் போய் பார்க்கலாம். இது ஜனாதிபதியின் பாதுகாப்புடன் தொடர்புடையது. இவ்வாறான பொருளை எப்படி கொண்டு வர முடியும்.
இதனால் இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். பாராளுமன்ற செயலாளர், பாதுகாப்பு தரப்பினருக்கு இந்த விடயம் தெரியுமா? என்று பார்க்க வேண்டும்.
தனியார் நிறுவனத்தின் ஊடாக இவ்வாறு கொண்டு வர முடியுமா? ஜனாதிபதியின் பதவியேற்பின் போது செலவு செய்த தனியார் நிறுவனமே இந்த மெத்தையையும் கொண்டு வந்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய நபர், அர்ஜுன மகேந்திரனுக்கு அடுத்தப்படியான இரண்டாவது நபராக இருக்கலாம். அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது அவரை ஏமாற்றி அர்ஜுன மகேந்திரன் வெளிநாடுக்கு தப்பிச் சென்றார்.
இப்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் போது இரண்டாவது நபர் மெத்தை, கட்டில், கதிரைகளை கொடுத்து செல்ல முயற்சிக்கலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM