வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கே ரத்நாயக்க தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தின் சீரற்ற காலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குபட்ட இராசேந்திரம் பகுதியில் மூன்று குடும்பங்களை நேர்ந்த பத்து அங்கத்தவர்களும் , ஆசிகுளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு அங்கத்தவர்களும் , மருதமடு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் , கல்மடு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் என வவுனியா பிரதேச செயலக பிரிவில் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஆறு குடும்பங்களை சேர்ந்த இருபது அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச பிரிவுக்குட்பட்ட பிரபமடு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு அங்கத்தவர்களும், அவசலபிட்டிய பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அங்கத்தவரும், அலகல்ல பகுதியில் ஒரு குடும்பத்தினரை சேர்ந்த நான்கு அங்கத்தவர்களும் என வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று குடும்பங்களை சேர்ந்த ஒன்பது அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவுகின்ற சீரற்ற காலநிலை காணப்படுவதினால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் ஏதேனும் அனர்த்தம் இடம்பெற்றால் அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸ் நிலையம், கிராம சேவையாளர் அல்லது பிரதேச செயலகங்களுக்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM