அருள்கார்க்கி
நாம் இயற்கையைச் சார்ந்திருக்கிறோம், ஆனால் இயற்கையைப் பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் உறுதிமொழிகள் வழங்கப்படுவதை போல அதனை நடைமுறைப்படுத்த போதுமான அளவு செய்கிறோமா? உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பங்கெடுக்கும் நாடுகள், எதிர்காலப் பாதுகாப்பிற்கு வழிகாட்டும் 2020-க்குப் பிந்தைய உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கின்றன, மேலும் நமது பொருளாதாரங்களை மிகவும் சமமானதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்கான முயற்சிகளை அனைத்து நாடுகளும் முன்னெடுக்கும். ஆனால் இதை அரசுகள் தனித்து செய்ய முடியாது.
பூமியின் எல்லைகளுக்குள் நமது சமநிலையை பராமரிக்கவும் மீட்டெடுக்கவும் இயற்கை முதுகெலும்பாக உள்ளது. ஆயினும்கூட, இயற்கையைப் பாதுகாப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் , செயல்களின் மூலம் நிறைவேற்றப்படுவதை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு நாம் போதுமான அளவு நடவடிக்கை எடுக்கின்றோமா என்பது கேள்விக்குறியே ?
பல அண்மைய அறிக்கைகள் நமது பூமியின் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் (IPBES) தொடர்பான அரசுகளுக்கிடையேயான அறிவியல்-கொள்கை அறிக்கை மற்றும் பல்லுயிர் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கு இடையிலான குழு (IPCC) அறிக்கை ஆகியவற்றின்படி : 77% நிலம் (அண்டார்டிகாவைத் தவிர) மற்றும் 87% கடலின் பரப்பளவு என்பன மனித நடவடிக்கைகளின் நேரடி விளைவுகளால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
இந்த மாற்றங்கள் 83% வனவிலங்குகள் மற்றும் பாலூட்டி உயிரிகளின் இழப்புடன் தொடர்புடையது, மேலும் தாவரங்களின் அழிவும் இதில் உள்ளடங்குகின்றது . மனிதனால் இடம்பெற்ற இந்த நிலச் சீரழிவு பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் வளங்களை இழப்பதில் வருடாந்திர உலகளாவிய மொத்த உற்பத்தியில் 10% க்கும் அதிகமாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது . 2050ல் குறைந்தபட்சம் 14 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என மதிப்பிடப்பட்ட உத்தேச செலவு அமைகின்றது.
நாடுகளின் பொருளாதாரங்கள் இயற்கை மற்றும் அதன் சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை அதிகம் சார்ந்துள்ளது. உலகின் மொத்த உற்பத்தியில் அரைவாசிக்கும் மேல் 44 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இயற்கை மற்றும் அதன் வளங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்துள்ளது.
நாடுகளின் பொருளாதாரங்கள் இயற்கை மற்றும் அதன் வளங்களை அதிகம் சார்ந்துள்ளது. உலகின் மொத்த உற்பத்தியில் அரைவாசிக்கும் மேல் - 44 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இயற்கை மற்றும் அதன் வளங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்துள்ளது, இதன் விளைவாக, இயற்கை வளங்கள் நாளுக்கு நாள் அதிகமாக இழக்கப்படுகின்றது.
பல்லுயிர் இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு ஆகியவை ஏற்கனவே விளிம்புநிலை மக்களை அதிகமாக பாதிக்கின்றன. 2050 ஆம் ஆண்டளவில், இந்த வளங்களின் இழப்பின் பெறுமதி குறைந்தது 14 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% சதவீதமாகும்.
கடந்த ஆண்டு ஐந்தாவது உலகளாவிய பல்லுயிர் அறிக்கையில் Global Biodiversity Outlook (GBO-5) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது காலநிலை மாற்றம், நீண்டகால உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய மேலும் பல்லுயிர் இழப்பை குறைப்பதட்கும் , முடிவுக்கு கொண்டுவருவதற்கும் உடனடியாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. GBO-5 அறிக்கையில் இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாம் வளங்களை
நுகர்வதை நிர்வகிக்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்கட்டமைப்பு ஒன்று தேவைப்படுகிறது.
2020க்குப் பிந்தைய உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதானது , IPBES மற்றும் GBO-5 அறிக்கைகளால் அடையாளம் காணப்பட்ட தீர்வுகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும்.
சீனாவின் குன்மிங்கில் நடைபெற்ற CBD ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (COP15) 15வது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாக, 2020-க்குப் பிந்தைய கட்டமைப்பானது பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் நிலையான முகாமைத்துவத்துக்கான ஒரு மூலோபாய திட்டத்தை வழங்குவதாக அமைகின்றது.
ஜூலை 2021 இல் வெளியிடப்பட்ட கட்டமைப்பின் முதல் வரைவு, பொருளாதார, சமூக மற்றும் நிதி மாதிரிகளை நாடுகளுக்கிடையில் பரிமாறிக்கொள்வதட்கு உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய அளவிலான அவசரக் கொள்கை நடவடிக்கை தேவை என்பதை அங்கீகரித்துள்ளது, எனவே பல்லுயிர் இழப்பை குறைக்கும் வேலைத்திட்டங்கள் 2030 க்குள் நடைமுறைப்படுத்தவேண்டும். இதன்மூலம் 2050 இல் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
இந்த கட்டமைப்பில் 2030க்கான 21 இலக்குகள் உள்ளன, அவையாவன;
- உலகளவில் குறைந்தது 30% நிலப்பகுதிகள் மற்றும் கடல் பகுதிகள், குறிப்பாக பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் மக்களுக்கு அதன் பங்களிப்புகள், திறம்பட மற்றும் சமமாக நிர்வகிக்கப்பட்டு வேண்டும்.
- சுற்றுச்சூழல் ரீதியாக பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ஏனைய வளப்பிரதேசங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல். மற்றும் பரந்த நிலப்பரப்புகள் மற்றும் கடற்பரப்புகளில் பல்லுயிர் பெருக்கத்திட்கு ஏதுவான பகுதிகளை ஒருங்கிணைத்து பாதுகாத்தல்.
- சுற்றுசூழலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுவதை பாதியாக குறைத்தல், பூச்சிக்கொல்லி மருந்துகளை மூன்றில் இரண்டு பங்கு குறைத்து, பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றுவதை நீக்குதல்.
- உலகளாவிய காலநிலை மாற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளுக்கு இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை அடையாளம் கண்டு செயல்படுத்தல்.
- பல்லுயிர் பெருக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளை மட்டுப்படுத்தல், வளங்களை மறுபயன்பாடு செய்தல்,பல்லுயிர் இழப்புக்கு காரணமானவற்றை சீர்திருத்தம் செய்தல் அல்லது நீக்குதல், நியாயமான மற்றும் சமமான முறையில், ஆண்டுக்கு குறைந்தபட்சம் USD 500 பில்லியன் வரை குறைத்தல்.
- அனைத்து மூலங்களிலிருந்தும் சர்வதேச நிதி ஓட்டங்களில் 200 பில்லியன் டாலர் அதிகரிப்பு செய்தல்.
இந்த 2020க்குப் பிந்தைய கட்டமைப்பானது, பல்லுயிர் 2011-2020க்கான மூலோபாயத் திட்டம் மற்றும் அதன் பல்லுயிர் இலக்குகளுடன் கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த கட்டமைப்பு வெற்றிபெற, அனைத்து தளங்களிலும் தேவையான அணுகுமுறை அவசியமாகும்.
இதன் விளைவாக, மாற்றத்திற்கான கட்டமைப்பின் கோட்பாடு மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செயல்படுத்தல் மற்றும் முக்கிய நீரோட்டத்திற்கான கருவிகள் மற்றும் தீர்வுகளை முன்வைத்தல், பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைக் குறைத்தல் மற்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்லுயிர் பெருக்கம் நிலையான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல், நிதி ஆதாரங்கள், திறன் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் செயல்படுத்துவதற்கான போதுமான வழிமுறைகள் என்பன மூலம் இந்த நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்படுகின்றன.
அதேபோல் பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள், வணிகங்கள் மற்றும் நிதித்துறை ஆகியவை இயற்கைக்கு சாதகமான எதிர்காலத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிவில் சமூகம், குறிப்பாக, கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய இரண்டிலும் செயல்பாட்டில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் இங்கர் ஆண்டர்சன் குறிப்பிடுவது போல், நாம் சுயநலமாக சிந்திப்பதை நிறுத்துவது மிகவும் முக்கியமானது. பல்லுயிர் இழப்பு, உலகளாவிய காலநிலை நெருக்கடி, கோவிட்-19 தொற்றுநோய் ஆகிய பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது. மற்றும் இவை இயற்கையுடனான நமது ஆரோக்கியமற்ற, நிலைபேறற்ற உறவின் அறிகுறிகளாகும்.
அதன்படி, முதல் வரைவின் 14ஆம் இலக்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது: 'கொள்கைகள், ஒழுங்குமுறைகள், திட்டமிடல், வளர்ச்சி செயல்முறைகள், வறுமைக் ஒழிப்பு உத்திகள், நிதி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளின் மதிப்பீடுகள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் பல்லுயிர் மதிப்புகளை முழுமையாக ஒருங்கிணைத்தல் ஆகிய அனைத்து செயல்பாடுகளும் மற்றும் நிதிநிலைகளும் பல்லுயிர் மதிப்புகளுடன் இணைந்திருப்பதை உறுதி செய்தல்.
இந்த இலக்குகளை நாம் தனித்து அடைவது சாத்தியமில்லை.அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் உயிர்ப்பல்வகைமை இழப்புகளை சீர்செய்ய நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளுகின்றன.இலங்கை விடயத்திலும் சமீப காலமாக கடல் சார் பிரதேசங்களில் பல்லுயிர் இழப்புகள் அதிகரித்த வண்ணமுள்ளன.இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியில் பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்ய நிதி ஒதுக்கங்களை செய்வது சாத்தியமற்றது.
இவ்வாறான சூழலில் சர்வதேசத்தின் உதவியை இலங்கை நாட வேண்டியேட்படுகின்றது. மேலும் அந்த நிதியை நேர்மையாக பயன்படுத்துவதும் அவசியமாகும். எனவே பாரிய ஒரு கூட்டு முயட்சி இந்த விடயத்தில் தேவைப்படுகின்றது. தனியார் துறை ,பெண்கள், இளைஜர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி ஒரு தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM