புர்கா அணிந்து நடனமாடிய 4 ஆண் மாணவர்கள் இடைநிறுத்தம்: கர்நாடகாவிலுள்ள பொறியியல் கல்லூரி நடவடிக்கை

Published By: Sethu

09 Dec, 2022 | 01:22 PM
image

கர்நாடகா மாநிலத்திலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் மாணவர் சங்க விழாவில் புர்கா அணிந்து பொலிவூட் பாடலுக்கு நடனமாடிய 4 ஆண் மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 

மங்களூரு நகரிலுள்ள செயின்ற் ஜோசப் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 

இக்கல்லூரி மாணவர் சங்கத்தின் ஆரம்ப விழா அண்மையில் நடைபெற்றது. இதன்போது, ஒரு நிகழ்வாக புர்கா அணிந்த ஆண் மாணவர்கள் நால்வர் பொலிவூட்டின் தபாங் திரைப்படத்தின் பாடலொன்றுக்கு நடனமாடினர். 

ஆடிக்கொண்டிருந்த மாணவர்கள் இடையிலேயே மேடையிலிருந்து வெளியேறும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மேற்படி சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், இவ்விசாரணைகள் முடிவடையும் வரை மாணவர்கள் நால்வரும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேற்படி கல்லூரி அதிபர் கலாநிதி எம்.சுதீர் அறிவித்துள்ளார்.

மேற்படி நடனத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அதிபர் குறிப்பிட்டுள்ளார். இவ்விழாவின் அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலில் இந்;நடனம் இம்பெற்றிருக்கவில்லை எனவும் கல்லூரியில் உள்ள அனைவருடைய மத நல்லிணக்கத்திற்கு தீங்கு இழைக்கும் எந்த நடவடிக்கையையும் கல்லூரி நிர்வாகம் ஆதரிக்காது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே...

2025-03-19 10:15:05
news-image

பூமிக்கு திரும்பிய சுனிதா, வில்மோர் :...

2025-03-19 10:57:05
news-image

டிரம்ப் - புட்டின் பேச்சுவார்த்தை -...

2025-03-19 06:37:00
news-image

17 மணி நேர பயணம் :...

2025-03-19 04:55:50