ஐரோப்பிய எல்லைகளில் குடியேற்றவாசிகள் முன்னர் ஒருபோதும் இல்லாத வன்முறையை எதிர்கொள்கின்றனர் - புதிய அறிக்கை

Published By: Rajeeban

09 Dec, 2022 | 11:56 AM
image

ஐரோப்பிய எல்லைகளில் காத்திருக்கின்ற ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் முன்னர் ஒருபோதும் இல்லாத வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர் என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய எல்லையில் காத்திருக்கின்ற குடியேற்றவாசிகள் தாக்கப்படுகின்றனர் பாலியல் தாக்குதல்கள் உட்பட மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தப்படுகின்றனர் என அறிக்iயொன்று தெரிவித்துள்ளது.

2021 - 2022 இல் ஐரோப்பாவிற்கு செல்ல முயன்று எல்லைகளில் சிக்கிய 733பேர் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட அறிக்கைக்கான தகவல்களை வழங்கியவர்கள் தங்கள் துன்பங்கள் மற்றும் விரக்திகுறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

பொலிஸாரினால் தாக்கப்பட்டதாகவும் பெருமளவானவர்களுடன்  சுகாதாரமற்ற பகுதிகளில் தடுத்துவைக்கப்பட்டதாகவும் அதேவேளை தங்களுடைய புகலிடக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவித்தவர்களில் ஐந்து வீதமானவர்கள் மாத்திரம் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்படும்போது அளவுக்கதிகமான பலத்தை அனுபவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனனர்.

பல அரசசார்பற்ற அமைப்புகளை உள்ளடக்கிய எல்லை வன்முறை கண்காணிப்பு அமைப்பே இந்த விபரங்களை தொகுத்துள்ளது.

ஐரோப்பாவின் எல்லையில் உள்ள போலாந்து கிரேக்கம் குரோசியா உட்பட 15 நாடுகளில் இந்த தரவுகள் பெறப்பட்டுள்ளன.

 ஐரோப்பாவின் வெளிப்புற எல்லையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில்  காணப்பட்ட குடியேற்றவாசிகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகவும் ஈவிரக்கமற்ற வன்முறைகளை பதிவு செய்வதற்கு எவரும் இருக்கவில்லை என எல்லை வன்முறை கண்காணிப்பு தெரிவித்;துள்ளது.

அகதிகள் ஐரோப்பாவின் எல்லைகளை நோக்கி முன்னேறுவதை தடுப்பதற்காக 13 நாடுகள் மிகவும் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளானஅடித்தல்  தலைகளை மொட்டையடித்தல் பலவந்தமாக ஆடைகளை களைதல் பாலியல் வன்முறைகள் நாய்தாக்குதல் போன்றவற்றை முன்னெடுத்தன  என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லைக்கு அப்பால் பலவந்தமாக அனுப்ப முடியாது மக்களிற்கு புகலிடக்கோரிக்கையை முன்வைப்பதற்கான உரிமைகள் உள்ளன என ஐரோப்பிய சர்வதேச சட்டங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21