ஒருபாலினத் திருமணங்களை பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த சட்டமூலத்தில் உடனடியாக தான் கையெழுத்திடவுள்ளதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
திருமணத்துக்கு கௌரவம் அளிக்கும் சட்டம் (Respect for Marriage Act – RFMA) என அழைக்கப்படும் இச்சட்டம், ஒரு பாலினத் திருமணம் செய்தவர்களையும் திருமணமான தம்பதியினராக கருதுமாறு அமெரிக்க சமஷ்டி அரசையும் மாநில அரசையும் கோருகிறது.
இந்த சட்டமூலம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் வியாழக்கிழமை (08) வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 258 பேரும் எதிராக 169 பேரும் வாக்களித்தனர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 39 பேரும் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கடந்த மாதம் செனட் சபையில் இச்சட்டமூலம் 61-36 விகிதத்தில் அங்கீகரிக்கப்பட்டது. அப்போது குடியரசுக் கட்சியி;ன 12 அங்கத்தவர்களும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள, பதவி விலகிச் செல்லும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் நான்சி பெலோசி, 'எனது தொழிற்சார் வாழ்க்கையை எல்ஜிபிடிகியூ சமூகத்தினருக்காகப் போராடுவதிலிருந்து நான் ஆரம்பித்தேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM