தமிழ் திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கனெக்ட்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
'மாயா', 'கேம் ஓவர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கனெக்ட்'. இதில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
அவருடன் பொலிவுட் நடிகர் அனுபம் கெர், சத்யராஜ், ஹனியா நஃபீஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் 22 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த முன்னோட்டத்தில் நடிகை நயன்தாராவின் தோற்றமும், அவர் குடும்பத்துடன் இருக்கும் காட்சிகளும், அவரது குடும்பத்தில் இடையூறையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் பேயையும் காட்டி ரசிகர்களை பயமுறுத்தி இருக்கிறார்கள்.
கொரோனா காலகட்டத்தின் பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களிடத்தில் 'கனெக்ட்' பேரார்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM