நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் 'கேப்டன் மில்லர்' எனும் திரைப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சிவ ராஜ்குமார் இணைந்திருக்கிறார்.
'ராக்கி', 'சாணி காயிதம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இதில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோதியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.
இவர்களுடன் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.
இப்படத்தின் நடிகர்களின் பட்டியலில் லேட்டஸ்ட்டாக கன்னட திரையுலகின் சுப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் இணைந்திருக்கிறார்.இவர் தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து சிவராஜ்குமார் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் தமிழ் படம் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
இதனிடையே 'கேப்டன் மில்லர்', 1930 மற்றும் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் கதை நடைபெறுவது திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மூன்று வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM