கொரோன கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு சுற்றுலாத்துறை வரவேற்பு- விசா கட்டணம் அதிகரிப்பு குறித்து கவலை

Published By: Rajeeban

09 Dec, 2022 | 11:22 AM
image

சுற்றுலாப்பயணிகளிற்கான கொரோனா விதிமுறைகளை நீக்கியதை வரவேற்றுள்ள சுற்றுலாத்துறையினர்  இது இலங்கைக்கு வருவதற்கான சுற்றுலாப்பயணிகளின் விருப்பத்தினை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

பல மாதங்களாக உலக பொருளாதாரத்தை முடக்கிய கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார அதிகாரிகள் அறிமுகப்படுத்திய கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டும் என சுற்றுலாத்துறையினர் தொடர்ந்து பரப்புரை செய்து வந்தனர்.

எனினும் இவ்வருட ஆரம்பம் முதல் சுற்றுலாத்துறையை நோக்கமாக கொண்டு கொரோனா தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன.

இது சுற்றுலாப்பயணிகள் எந்தவித அசௌகரியமும் இன்றி எல்லைகள் ஊடாக பயணிப்பதை உறுதி செய்யும் என தெரிவித்திருந்த  இலங்கையின் சுற்றுலாத்துறை சார்ந்த அமைப்பு இலங்கை மாத்திரமே இன்னமும் கட்டுப்பாடுகளை அகற்றாமல் உள்ளது என கவலை தெரிவித்திருந்தது.

இதேவேளை விசா கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்தும் இலங்கையின் சுற்றுலாத்துறை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சுற்றுலாத்துறையின் மீள்எழுச்சி தொடர்பாக அரசாங்கம் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ள அதேவேளை சில நடவடிக்கைகள் இலங்கையில் சுற்றுலாத்துறையை  ஊக்குவிப்பதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன விசா கட்டணம் அதிகரிப்பு அவ்வாறான ஒன்று என சுற்றுலாத்துறை சார்ந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சுற்றுலாத்துறைக்கு மீண்டும் உயிர்கொடுப்பதற்காக அந்த தொழில்துறையை சேர்ந்தவர்கள் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற அதேவேளை விசா கட்டணங்களை அதிகரிப்பது என்ற அரசாங்கத்தின் தீர்மானம் பாரிய பின்னடைவாக காணப்படுகின்றது என சுற்றுலாத்துறையை சேர்ந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதிகள் போல் செயற்படுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க...

2024-06-13 16:54:47
news-image

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்புக்கு...

2024-06-13 20:54:34
news-image

நாளை 2 மணிக்குள் சாதகமான பதிலின்றேல்...

2024-06-13 17:35:08
news-image

நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல்...

2024-06-13 20:19:38
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய...

2024-06-13 19:53:18
news-image

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி...

2024-06-13 19:07:27
news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27
news-image

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி...

2024-06-13 17:33:18
news-image

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு...

2024-06-13 17:27:50
news-image

மற்றுமொரு ரயில் தடம் புரள்வு ;...

2024-06-13 17:13:01
news-image

யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப்...

2024-06-13 17:02:22