இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹொப் ஆதி தமிழா கதையின் நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக 'விஸ்வாசம்' படப் புகழ் நடிகை அனிகா சுரேந்திரன் நடிக்கிறார்.
இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
'நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' எனும் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகர் ஹிப் ஹொப் ஆதி தமிழா கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இவருக்கு ஜோடியாக நடிக்க 'விஸ்வாசம்' படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பேரன்பை பெற்ற நடிகை அனிகா சுரேந்திரன் தெரிவாகியிருக்கிறார். இதன் மூலம் குழந்தை நட்சத்திரமாக பயணித்து வந்த இவர், தற்போது இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும் இவர்களுடன் நடிகர்கள் பாண்டியராஜன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹொப் ஆதி தமிழா இசையமைக்கிறார்.
பாடசாலைகளில் மாணவர்களுக்கு விளையாட்டை கற்பிக்கும் ஆசிரியரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஈரோடு மாநகரில் நடைபெற்று வருகிறது.
அத்துடன் படப்பிடிப்பில் நடிகை அனிகா சுரேந்திரன் பங்குப்பற்றும் காட்சி துணுக்கை படக் குழுவினர் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதையின் நாயகியாக உயர்ந்திருக்கும் நடிகை அனிகா சுரேந்திரன், தமிழிலும் வெற்றி பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM