(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3 ஆவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாத்தின் முதலாவது சுற்றில் கலம்போ ஸ்டார்ஸ் தனது முதலாவது வெற்றியை வியாழக்கிழமை (08) ஈட்டிக்கொண்டது.
தனது ஆரம்பப் போட்டியில் கண்டி ஃபெல்கன்ஸ் அணியிடம் தோல்விகண்ட கலம்போ ஸ்டார்ஸ், தனது 2ஆவது போட்டியில் தம்புள்ள ஓரா அணியை 9 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.
அதேவேளை தம்புள்ள ஓரா தனது 2ஆவது தோல்வியைத் தழுவியது.
நிரோஷன் திக்வெல்ல குவித்த அரைச் சதம். சுரங்க லக்மாலின், துல்லியமான பந்துவீச்சு என்பன கலம்போ ஸ்டார்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கலம்போ ஸ்டார்ஸ் 20 ஒவர்களில் 9 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
எனினும் அவ்வணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரராக தன்னை உயர்த்திக்கொண்டுள்ள அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் இரண்டாவது தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார்.
மெத்யூஸ், நவோத் பரணவித்தான, சரித் அசலன்க ஆகிய மூவரும் ஆட்டமிழக்க 3 ஓவர்கள் நிறைவில் கலம்போ ஸ்டார்ஸ் 26 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தொடர்ந்து நிரோஷன் திக்வெல்லவும் ரவி பொப்பாராவும் 4ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் சரிவைத் தடுத்தனர். பொப்பாரா 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நிரோஷன் திக்வெல்ல 41 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைக் குவித்தார்.
அவர்களை விட துடுப்பாட்டத்தில் ஓரளவு திறமையைத் வெளிப்படுத்திய தினேஷ் சந்திமால் 29 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் டொமினிக் ட்ரேக்ஸ் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் லஹிரு குமார 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஓரா 20 ஒவர்களில் 7 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முதல் 5 வீரர்கள் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் அவசரத் துடுக்கைகள் காரணமாக அவர்கள் ஆட்டமிழந்தனர்.
ஷெவொன் டெனியல் (28), ஜோர்டன் கொக்ஸ் (29) ஆகிய இருவரும் 29 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், அதன் பின்னர் சிறந்த இணைப்பாட்டங்கள் இடம்பெறாதமை அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
பானுக்க ராஜபக்ஷ 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தவறான அடி தெரிவினால் ஆட்டமிழந்தார்.
டொம் ஆபெல் (33), அணித் தலைவர் தசுன் ஷானக்க (31 ஆ.இ.) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் பின்வரிசையில் கிடைத்த சொற்ப பங்களிப்பு வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.
பந்துவீச்சில் சுரங்க லக்மால் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கரிம் ஜனத் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டொமினிக் ட்ரேக்ஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM