(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
பொருளாதார மீட்சிக்காக கடுமையான தீர்மானங்களை பிரபல்யமடையாத வகையில் எடுப்பதாக குறிப்பிடும் தரப்பினர் சுகபோகமாக வாழ்கிறார்கள். சொகுசு அறையில் இருந்து தீர்மானம் எடுப்பவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
வரி அதிகரிப்பின் சுமையை மக்கள் தாங்கிக்கொள்வதற்கும் ஒரு எல்லை உண்டு, ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை இந்த நாட்டுக்கு விடிவு காலம் பிறக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) வியாழக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வரி அதிகரிப்பையும், விலை அதிகரிப்பையும் பிரதான இலக்காக கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் பிரபல்யமடையும் தீர்மானங்களை எடுக்கவில்லை என்று பெருமையாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் பிரபல்யமடையாத தீர்மானங்கள் நாட்டு மக்களின் வாழ்க்கையை முழுமையாக பாதித்துள்ளது என்பதை அரசாங்கம் விளங்கி கொள்ள வேண்டும்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அரச நிறுவனங்களை தனியார் தரப்பிற்கு முழுமையாக விற்கும் தீர்மானம் காணப்படுகிறது.
ஒரு பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் முறையற்ற வகையில் பேரூந்தை செலுத்தி, வாகனத்தை விபத்துக்குள்ளாக்குகிறார். பேருந்தின் உரிமையாளர் சாரதியையும்,நடத்துனரையும் மாற்றாமல்,வண்டியை முழுமையாக விற்பனை செய்கிறார், இந்த கொள்கையையே அரசாங்கம் தற்போது பின்பற்றுகிறது.
அரச நிறுவனங்களை விற்று வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது, இது பொருளாதார பாதிப்புக்கு சிறந்த தீர்வாக அமையாது.
நட்டமடையும் அரச நிறுவனங்களின் செலவுகளை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். அரச நிறுவனங்களின் தேவையற்ற உயர் பதவிகளை இரத்து செய்ய வேண்டும், இதனை விடுத்து மறுசீரமைப்பு என்ற பெயரில் நிறுவனத்தை விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை. ஊழல் மோசடி மற்றும் அரச நிதியை கொள்ளையடித்தவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தவில்லை.
ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரும் வரை நாட்டை முன்னேற்ற முடியாது என்பதே யதார்த்தமான உண்மை, இதனை விடுத்து மக்களின் மீது வரி சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அனைத்து சுமைகளையும் மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்.பொருளாதார மீட்;சிக்காக கடுமையான தீர்மானங்களை பிரபல்யமடையாத வகையில் எடுப்பதாக குறிப்பிடும் தரப்பினர் சுகபோகமாகவே வாழ்கிறார்கள்.சொகுசு அறையில் இருந்து தீர்மானம் எடுப்பவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
மே மாதம் 09 ஆம் திகதி சம்பவத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி நான்கு புறமும் அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் உரிய தரப்பினர் அது குறித்து அவதானம் செலுத்தவில்லை எனவும் நாவலபிடி சிங்கம் என குறிப்பிட்டுக் கொள்பவர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
ஜனாதிபதி நான்கு புறமும் தொண்டை நீர் வற்ற அழைப்பு விடுக்க வேண்டிய தேவை கிடையாது.பாதுகாப்பு சபை கூட்டத்தை ஜனாதிபதி கூட்டியிருந்தால் நாட்டின் முப்படை தளபதிகளும்,பாதுகாப்பு பிரதானிகளும் வருகை தந்திருப்பார்கள்.ஆகவே பிரச்சினையை தீர்த்திருக்கலாம்.ஆகவே பொய்யுரைத்து இராணுவ அதிகாரிகளுக்கு சேறு பூச வேண்டாம்.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மே 09 சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,
ஆகவே அந்த அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டேன்.நீங்கள் குறிப்பிடும் தரப்பினர் சரியானவர்களாயின் குற்றத்தை திருத்திக் கொள்ளலாம்.பாராளுமன்ற அமர்வு முடிந்ததன் பின்னர் நீங்கள் இராணுவ அதிகாரிகளுடன் தொலைபேசியில் உரையாடுவதை அறிவோம்.ஆகவே அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டேன்,ஆகவே கலக்கமடைய வேண்டாம் என்றார்.
இதன்போது மீண்டும் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நீங்கள் குறிப்பிடும் விடயம் அறிக்கையில் இருந்தால்,சபைக்கு சமர்ப்பியுங்கள்.போலி குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு நாட்டு மக்களுக்கும்,எமக்கும் சேறு பூச வேண்டாம்.பிரதமர் பதவியை ஏற்குமாறு எனக்கு விடுத்த அழைப்பை நான் நிராகரித்தேன்,ஆனால் நீங்கள் தான் பிரமராகும் கனவில் உண்மை நண்பரின் மனைவியை கொண்டு சென்றீர்கள்.ஆகவே பொறுப்புடன் நடந்துக் கொள்ளுங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM