அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 204 ஓட்டங்களையும் 2 ஆவது இன்னிங்ஸில் 104 ஓட்டங்களையும் அவர் குவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஆரம்பமான, மேற்கிந்திய அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மார்னஸ் லபுஸ்சேன் சதம் குவித்தார்.
அடிலெய்ட் நகரில் நடைபெறும் இப்போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இன்றைய ஆட்டமுடிவின்போது அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வோர்ணர் 21 ஓட்டங்களுடனும் உஸ்மான் கவாஜா 62 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தார்.
எனினும், மார்னஸ் லபுஸ்சேன் ஆட்டமிழக்காமல் 120 ஓட்டங்களையும் ட்ரேவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களையும் குவித்தனர்.
இவ்விருவரும் 4 ஆவது விக்கெட்டுக்காக வீழ்த்தப்படாத 199 இணைப்பாட்ட ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்தமை இது இரண்டாவது தடவையாகும். இச்சாதனையைப் புரிந்த 2 ஆவது அவுஸ்திரேலிய வீரர் இவராவார்.
டேவிட் வோர்ணர் மாத்திரமே இதற்குமுன் 2 தடவைகள் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் குவித்த ஒரேயொரு அவுஸ்திரேலிய வீரராக விளங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM