பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்வாதம்: முல்லைத்தீவில் துண்டுப்பிரசுர விழிப்புணர்வு நிகழ்வு

By Nanthini

08 Dec, 2022 | 05:57 PM
image

யாழ்ப்பாணம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பால்நிலை வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் ஒட்டும் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 'பாலியல் தொந்தரவற்ற பயணத்தை உறுதி செய்வோம்', 'சக பயணியின் உரிமைகள் மீறப்படும்போது குரல் கொடுப்போம்', 'பாலியல் துன்புறுத்தல் நம் பண்பாட்டுக்கு உதவாது', 'பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பு அனைவரதும் பொறுப்பு', 'பெண்களையும் சிறுவர்களையும் வன்முறை செய்யாத பண்பாட்டை உருவாக்குவோம்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள், யாழ்ப்பாணம் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டியில் சுற்றுலாத்துறையினருக்கு சைக்கிள் சவாரி ஊக்குவிப்பு

2023-02-07 14:43:50
news-image

LMSV, 'Rotary Honda Purudu Championship'சிறுவர்களின்...

2023-02-07 12:17:22
news-image

அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தேர்பவனி

2023-02-07 11:28:05
news-image

'ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா' ஓவியக் கண்காட்சி

2023-02-06 14:34:16
news-image

மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக...

2023-02-06 13:08:25
news-image

சந்தா வாங்காத சங்கம் - சிவி...

2023-02-06 12:56:10
news-image

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா

2023-02-06 11:44:58
news-image

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப்பெருமஞ்ச...

2023-02-06 11:36:18
news-image

இராமகிருஷ்ண மிஷன் சிவாநந்த நலன்புரி நிலையத்திற்கு...

2023-02-06 11:13:02
news-image

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை...

2023-02-04 18:36:27
news-image

யாழில் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்  

2023-02-04 18:35:59
news-image

தியாகராஜர் கலைக்கோயில் மாணவி பிரியங்கா குகப்ரியாவின்...

2023-02-04 18:35:17