தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இலங்கை கிரிக்கெட் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி உபாதைக்குள்ளாகியிருந்த அணித்தலைவர் மெத்தியுஸ், சந்திமால் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சகலதுறை வீரர் அசேல குணரத்ன மற்றும் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

இதேவேளை மித வேக பந்துவீச்சாளர் விகும் சஞ்சய பண்டார அறிமுக வீரராக 15 பேர் கொண்ட குழாமில் தெரிசெய்யப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கான இலங்கைக்குழாமின் முழு விபரம் இதோ...

1.அஞ்சலோ மெத்தியுஸ் (தலைவர்)

2. தினேஷ் சந்திமால் (உபத் தலைவர்)

3. திமுத் கருணாரத்ன

4. கவுசால் சில்வா

5. குசல் ஜனித் பெரேரா

6. தனஞ்சய டி சில்வா

7. குசால் மெண்டிஸ்

8. உபுல் தரங்க

9. துஷ்மந்த சமீர

10. சுராங்க லக்மால்

11. லஹிரு குமார

12. நுவான் பிரதீப்

13. விகும் சஞ்சய பண்டார

14. ரங்கன ஹேரத்

15. டில்ருவான் பெரேரா