அரசியலமைப்புச் சபைக்கு பாளுமன்றத்தினை பிரதிநித்துவம் செய்யும் வகையிலான பிரதிநிதி நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி நீடிக்கின்றது.
இந்த நியமனத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை முன்மொழிவதென ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக நேற்றையதினம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சித்தார்த்தன், சுமந்திரன், சிறீதரன், ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனும் பங்கேற்றிருந்தார்.
இதனைவிடவும், விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, தயாசிறி ஜெயசேகர உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, குறித்த வெற்றிடத்தினை நிரப்புவது தொடர்பில் சபாநாயகர், பங்கேற்பாளர்களிடத்தில் அறிவிப்பைச் செய்தார்.
அச்சமயத்தில் சித்தார்த்தனின் பெயரை சுமந்திரன் முன்மொழியவும், சிறீதரன் வழிமொழிந்தார். எனினும், விமல்வீரவன்ச உதயகம்மன்பிலவின் பெயரை முன்மொழிந்தார்.
இதனால் யாரை நியமிப்பது என்று வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. குறிப்பாக, தயாசிறி, விமல்வீரவன், சுமந்திரன், மனோகணேசன் இடையே இந்த வாதப்பிரதிவாதங்கள் வலுத்திருந்தன.
குறிப்பாக, உதயகம்மன்பில தற்போது சுயாதீனமாகச் செயற்பட்டாலும், அவர் தற்போதைய பாராளுமன்றத்தில் பொது ஜன பெரமுனவையே பிரதிநிதித்துவப்படுத்துவதால் அவரது நியமனம் செல்லுபடியற்றது என்ற வாதத்தினை சுமந்திரன் முன்வைத்தார்.
எனினும், தயாசிறி, விமல் போன்றவர்கள் தாம் சுயாதீனமாக செயற்படுவதை சபாநாயகர் அங்கீகரித்துள்ளதால் தமக்கு உறுப்பினரை நியமிக்கும் உரித்து உள்ளதென்று தர்க்கம் செய்தனர்.
இதன்போது, தயாசிறி, கூட்டமைப்பு ஏகோபித்துச் செயற்படாத நிலையில் அவர்களுக்குரிய மூன்றாவது பாராளுமன்ற பெரும்பான்மை பிரதிநித்துவத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தர்க்கம் செய்தார்.
அச்சமயத்தில், மனோகணேசன், தமிழ் பேசும் பிரதிநிதியொருவர் அரசியலமைப்பு சபையில் இருப்பது பொருத்தமானதெனவும், ஆகவே சித்தார்த்தனையே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அப்போதும், விமல், தயாசிறி போன்றவர்கள் தமது கட்சியில் உள்ள தமிழ் பேசும் பிரதிநிதிகளை நியமிப்பதாக கூறி தர்க்கத்தை தொடர்ந்த நிலையில், பிறிதொரு சந்தர்ப்பத்தில் அப்பிரதிநிதித்துவ வெற்றிடத்தினை நிரப்புவது தொடர்பில் தீர்மானிப்பதென சபாநாயகர் குறிப்பிட்டு கூட்டத்தினை நிறைவுக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM