அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தலை பிற்போட சூழ்ச்சி - எஸ்.எம்.மரிக்கார்

Published By: Digital Desk 2

08 Dec, 2022 | 05:06 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் வரை அரசியலமைப்பு பேரவைக்கான எதிர்கட்சியின் பெயர் பரிந்துரையை முன்வைக்க போவதில்லை.

அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தலை பிற்போட சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.தேர்தலை பிற்போடும் தேவை ராஜபக்ஷர்களுக்கு உண்டு ஆனால் நாட்டு மக்கள் தேர்தலை எதிர்பார்த்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பொருளாதார குற்றவாளிகள் குறித்து ஆராய தெரிவு குழுவை அமைக்க தயாரா என ஜனாதிபதி ஆளும் தரப்பினரிடம் கேட்க வேண்டும்.

ஏனெனில் பொருளாதார குற்றவாளிகளிடமே ஜனாதிபதி தஞ்சமடைந்துள்ளார்.தெரிவு குழு அமைக்க முடிந்தால் இரு கைகளையும் உயர்த்துங்கள் என ஆளும் தரப்பினரை நோக்கி சவால் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08)  இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பெரிய இலக்கங்களால் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள பொய் தொடர்பில் கருத்துரைக்க போவதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேச நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கவதாகவும், கடன் மறுசீரமைப்புக்கு பிரதான நிலை கடன் வழங்குநர்கள் இணக்கம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இதுவரை எவரும் கடன் வழங்கவில்லை,கடன் மறுசீரமைப்பும் இழுபறி நிலையில் உள்ளது.

பொருளாதார பாதிப்பு குற்றவாளிகள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழு அமைக்க தயார் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

பொருளாதார குற்றத்தை அவர் தஞ்சம் புகுந்துள்ள தரப்பினரே செய்தார்கள். ஆகவே தெரிவு குழு தொடர்பில் ஜனாதிபதி ஆளும் தரப்பினரிடம் வினவ வேண்டும். தெரிவு குழு அமைக்க நாங்கள் இணக்கம் தெரிவித்துள்ளோம்.

பொருளாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கியவர்களுக்கு தண்டனை வழங்குங்கள் என சர்வதேச மனித உரிமை பேரவை முதன் முறையாக இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.

போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதியாக பதவிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தின் உண்மை நோக்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். மோசடி செய்யப்பட்ட அரச நிதி மீண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08