'நாட்டிய கலா மந்திர்' நடனக் கலையகம் தயாரிப்பில் 'ஸ்ரீ ராம ராஜ்யம்' நாட்டிய நாடகம்

Published By: Ponmalar

08 Dec, 2022 | 05:05 PM
image

நாட்டிய கலா மந்திர் தயாரிப்பில் இலங்கைக் கலைஞர்கள் பங்குகொண்ட 'ஸ்ரீ ராம ராஜ்யம்' நாட்டிய நாடகம் 6ஆவது சர்வதேச ராமாயண விழா அங்குரார்ப்பண தினத்தில் கடந்த மாதம் இந்தியாவின் மத்திய பிரதேச தலைநகரான போபாலில் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து இந்திய தலைநகர் புதுடெல்லியில் இந்திய கலாசார அமைச்சின் கலாசார மையமான 'கமனி' அரங்கில் நடைபெற்றது. அதையடுத்து மறுதினம் இந்திய பாராளுமன்றத்தின் ராஜ்யசபா செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மேடையேற்றப்பட்டது. இந்திய கலாசார அமைச்சும், இந்திய வெளிவிவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்வைபவங்களில் அடுத்ததாக உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள ஆன்மீக மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ராம பிரான் மாநகரில் 'தீபோற்சவ' திருநாள் வைபவங்களில் இரு தடவைகள் அரங்கேறியது. பிரதான வைபவத்தன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பித்தார்.

இவ்விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த கலைஞர்களால் ஸ்ரீ ராமர் சரித கதாம்சம் நாட்டிய நாடகங்களாக மிகவும் கலைத்துவமாக வடிவமைக்கப்பட்டு அந்தந்த நாடுகளின் தனித்துவமான கலை கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் மேடையேற்றப்பட்டன. இந்த மாபெரும் கலாசார விழாவில் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, ரஷ்யா, ஃபிஜி, டிறினிடாட் டொபாகோ போன்ற நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களால் இராமாயணம் நாட்டிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

குஜராத் மாநிலத்தில் நர்மதா நதிதீரத்தில் உலகின் அதி உயரமான சிலையாக அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் நினைவுச் சின்ன கலாசார கேந்திரத்திலும் அதன் பின்னர் இந்தியாவின் மிகவும் பழைமைவாய்ந்த பரோடா மாநகரில் அமைந்துள்ள மகாராஜா சயஜிராவ் பல்கலைக்கழகத்தின் கட்புல அரங்கேற்றுக் கலைகள் பீடத்தின் அரங்கத்திலும் இந்நாட்டிய நாடகம் அரங்கேறியது.

இலங்கைக்கான இந்திய தூதரகம், இந்திய கலாசார நிலையம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வுகளின் போது 'ஸ்ரீ ராம ராஜ்யம்' நாட்டிய நாடகம் ஏழு தடவைகள் இந்தியாவில் மேடையேற்றப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது இலங்கை நாட்டின் கலைஞர்களுக்கு கிடைக்கப் பெற்ற மிகப் பெரிய கௌரவமாகும்.

இந்த நாட்டிய நாடகத்திற்கு நடன நெறியாள்கை மேற்கொண்டு தயாரித்து வழங்கியிருந்தார் 'பரத பூஷண திகம்', ‘கலாசூரி' வாசுகி ஜெகதீஸ்வரன். இசையாக்கங்கள் நதீக அசங்க வெலிகொடபொல, நடனத்தில் திருமுதி வாசுகி ஜெகதீஸ்வரனுடன் ப.ங்கேற்ற நாட்டிய கலா மந்திர் கலைஞர்கள் அனுஜா ஐங்கரன், மிருணாளினி சோமசுந்தர ஐயர், சாருஹாசினி ஸ்ரீ கிருஷ்ணன், சுகக்ஷிதா திருஞானம், யதுர்வேதா பொன்னுசாமி, சரண்யா சுதாகரன், மதுரா ஈஸ்வரன், தக்ஷணா பிரபாகரன் குமாரரட்ணம், அம்ரிதா கேதீஸ்வரன் ஆகியோர் இந்நாட்டிய நாடகத்தில் சிறப்புக் கலைஞர்களாக இலங்கையிலும் இந்தியாவிலும் புகழவாய்ந்த நடன விற்பன்னர், நடன அமைப்பாளர் திரு. டி.கே. திருச்செல்வம் அவர்களும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நாடகம் மற்றும் அரங்கியல் விரிவுரையாளர் திரு. ரி. தர்மலிங்கம் அவர்களும் இராமாயணக் கதையின் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடனமாடி சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி வடிவமைப்பு, ஆய்வுகள் மற்றும் தயாரிப்பு ஆலோசனைகளை சிரேஷ்ட ஒளிபரப்பாளர் எஸ்.விஸ்வநாதன் வழங்கியிருந்தார். நிகழ்ச்சி வர்ணனைகளை ரூபவாஹினி செய்தி அறிவிப்பாளர் விஜய் அபினந்தன் வழங்கினார். 'ஸ்ரீ ராம ராஜ்யம்' நாட்டிய நாடகம் கொழும்பில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்திலும் நம் நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் மேடையேற்றப்பட்டு அவர்களின் பெரும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08