இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி நம்பிக்கை

Published By: Rajeeban

08 Dec, 2022 | 04:31 PM
image

இலங்கையின் பொருளாதார மீட்சியை நோக்கிய பயணம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி ஆனால் மீட்சிக்கான பாதை சவாலானது அனைத்து பங்குதாரர்களின் ஆதரவும் இதற்கு அவசியம் என குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் மீட்சியை நோக்கிய பாதையில் பயணிக்கின்றது  இது மிகவும் சாதகமான விடயம் என தெரிவித்துள்ள ஆசியி அபிவிருத்தி வங்கியின் துணை தலைவர் சிசின் சென்  அரசாங்கம் ஸ்திரப்படுத்தும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துகின்றதுஇது முழுமையான திட்டம்  சில பொருளாதார குறிகாட்டிகள் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டெய்லி எவ்டிக்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போதைய சவாலை எதிர்கொள்வதற்கான சர்வதேச அமைப்புகளின் உறுதியான ஆதரவை அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு தற்போது அதன் அபிவிருத்தி சகாக்களின்  ஆதரவு அவசியம் இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி மிகுந்த ஆர்வத்தை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைவரையும் உள்ளடக்கிய பன்முகப்படுத்தப்பட்ட மீட்சி பாதையை நோக்கிய அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பும் முயற்சிகளும் பாராட்டத்தக்கவை எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது அவசியமானது அரசாங்கத்தின் நிதி நிலைமை கடன் பணவீக்கம் அத்;தியாவசிய பொருட்களின் விநியோகம் ஆகியவை தற்போது கவனம் செலுத்தப்படவேண்டிய முக்கியமான விடயங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் சிறுவர்கள் உட்பட நலிவடைந்தவர்களை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் இலங்கையை வளர்ச்சிபாதையில் கொண்டு செல்லக்கூடிய துறைகளை ஆராயவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44