தமிழினத்தையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதை விடுத்து இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் - சிறிதரன்

Published By: Digital Desk 2

08 Dec, 2022 | 04:54 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுதந்திர தினத்திற்கு இன்னும் 57 நாட்கள் உள்ளன. இருப்பினும் தீர்வு வழங்க ஜனாதிபதி ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை கூட எடுக்கவில்லை.

தமிழினத்தையும், சர்வதேசத்தையும் தொடர்ந்து ஏமாற்றுவதை விடுத்து. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச சமூகத்தின் நடுநிலையை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08)  இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அடிப்படை பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண உரிய கொள்கை இதுவரை வகுக்கப்படவில்லை.

75ஆவது சுதந்திரத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 57 நாட்கள் உள்ளன.

இருப்பினும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கான ஒரு களம் கூட அமைக்கவில்லை.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது பொய்யாக்கப்படும். பொய்யுரைக்கும் அரசியல் நிலைவரமாகவே இலங்கை சென்றுக் கொண்டிருக்கிறது.

நாட்டின் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண என்ன வழி? பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.

30 வருடகால யுத்தத்தின் போது தமிழர்களை தான் களைத்தீர்கள். ஆனால் தற்போது சிங்களவர்கள் நாட்டை விட்டுச் செல்கிறார்கள். அவ்வாறாயின் சிங்கள மக்கள் தற்போது நாட்டில் நிலவும் பொய்யான அரசியலை விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

சிங்களவர்களால் கூட நாட்டில் இருக்க முடியாத நிலை தற்போது உள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உண்மையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எமது மொழி உரிமை திட்டமிட்ட வகையில் மறுக்கப்படுகிறது. தீர்வுக்கான அடிப்படை உரிமைகள் கூட தற்போது இல்லாதொழிக்கப்படுகிறது.

யுத்தததின் ஊடாக தமிழ் மக்களை வென்று விட்டதாக கருதப்படுகிறது. இந்த மனநிலையில் இருந்துக் கொண்டு எவ்வாறு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

நெருக்கடிக்கு தீர்வு காண எவரது ஒத்துழைப்பும் தேவையில்லை என குறிப்பிடுகின்றீர்கள். யுத்த காலத்தில் ஆயுதங்கள், புலனாய்வு தகவல்கள் அனைத்தும் வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் சமாதான விடயத்தில் வெளிநாடுகளின் தலையீடு அவசியம் இல்லை என குறிப்பிடுவது எவ்விதத்தில் நியாயமாகும். இது தான் இந்த நாட்டின் அடிப்படை என்றால் சர்வதேசம் எவ்வாறு ஒத்தழைப்பு வழங்கும்.

யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகள் கடந்துள்ள பின்னணியில் தமிழ் தரப்பினர் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு திட்டத்தை முன்வைத்துள்ளார்கள்.

தமிழ் மக்களும் இதனையே அவதானித்துள்ளார்கள். தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குங்கள் என சர்வதேசம் குறிப்பிடும் ஆலோசனைகளை மதித்து செயல்படுங்கள்.

இந்த நாடு முன்னேற்றமடைய வேண்டும் என்றால் மலையக உறவுகள், முஸ்லிம் உறவுகள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்குங்கள். இனப் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச சமூகத்தின் நடுநிலையை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33