குரோஷிய கால்பந்தாட்ட ரசிகர்களின் கோஷங்கள் தொடர்பில் குரோஷியாவுக்கு சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) 50,000 சுவிஸ் பிராங்குகள் (1.94 கோடி இலங்கை ரூபா/ 43 லட்சம் இந்திய ரூபா) அபராதம் விதித்துள்ளது.
கனேடிய கோல்காப்பாளரை அவமதிக்கும் வகையில் குரோஷிய ரசிகர்கள் கோஷமிட்டதால் குரோஷிய கால்பந்தாட்டச் சம்மேளனத்துக்கு நேற்று புதன்கிழமை இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற கனேடிய – குரோஷிய அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது கனேடிய கோல்காப்பாளர் மிலான் போர்ஜானை (Milan Borjan) அவமதிக்கும் வகையில் குரோஷிய ரசிகர்கள் கோஷமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
சர்ச்சைக்குரிய சில பதாகைகளையும் குரோஷிய ரசிகர்கள் ஏந்தியிருந்தனர். 1995 ஆம் ஆண்டு, குரோஷிய சிவில் யுத்தத்தை முடிவுக்க கொண்டுவரும் வகையில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை தொடர்பான பதாகையும் இவற்றில் அடங்கும்.
மேற்படி இராணுவ நடவடிக்கையின்போதும், அதன் பின்னரும் சுமார் 2 லட்சம் சேர்பிய இன மக்கள் நாட்டிலிருந்து வெளியேறினர். இவர்களில் மிலான் போர்ஜானின் குடும்பத்தினரும் அடங்குவர். 2000 ஆம் ஆண்டு மிலான் போர்ஜானின் குடும்பத்தினர் கனடாவுக்கு புலம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பிரேஸில் அணியுடனான கால் இறுதிப் போட்டியில் குரோஷியா மோதவுள்ளது. இப்போட்டிக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன் குரோஷியாவுக்கான அபராதத்தை பீபா அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM