மன்னார் பேசாலை புனித வெற்றிமாதாவின் வருடாந்த திருவிழா

By Ponmalar

08 Dec, 2022 | 04:21 PM
image

மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த 29 ஆம் திகதி செவ்வாய்கிழமை பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இவ் விழாவானது இன்று வியாழக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் தலைமையில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு பெற்றது.

இவ் விழாவை முன்னிட்டு கடந்த ஒன்பது தினங்களாக 'அன்பால் இணைவோம் கூட்டொருங்கியங்க அன்பியம் ஆவோம்', 'விசுவாசத்தின் உறுதி பெறும் கிறிஸ்தவ ஒருங்கியத்த வாழ்வு', 'தூய ஆவியானவருடைய இயல்பை எம்மில் கொண்டு வாழ கூட்டாக அழைக்கப்பட்ட பங்கு திருச்சபை நாம்', 'சவால்கள் நிறைந்த திருச்சபையின் விசுவாசப் பயணத்தில் ஒருங்கிசைவோடு பயணிக்க அழைக்கப்படும் இளைஞர் யுவதிகள்', 'இறைவனின் சாபங்களை பேறுகளாக, வரங்களாக , ஆசீர்வாதங்களாக மாற்றும் எமது மனமாற்றம்', 'வாருங்கள் இயேசுவுக்கு முன்னால் கூட்டாக அமர்வோம்', 'கடவுளின் அன்பு மடல்கள் ஒரே கடவுளின் பிள்ளைகள் ஆவோம்', 'திருமண வாழ்வு ஒருமைபாட்டிற்கு இறைவன் விடுக்கும் உன்னத அழைப்பு.', 'இயேசுவின் அன்பு என்னை கூட்டொருங்கியமாக வலுப்படுத்துகின்றது', 'ஒரே குடும்பமாக எம்மை அரவனைக்கும் வெற்றி மாதா' என்ற கருப்பொருள்ளில் மக்கள் சிந்திக்க மறையுரைகள் ஆற்றப்பட்டன.

பெருவிழாவின் திருப்பலியைத் தொடர்ந்து  திருச்சொரூப பவனி இடம்பெற்றபோது கொட்டும் மழையிலும் பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆயரினால் திருச்சொரூப ஆசீரும் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் வங்கி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி...

2023-02-08 12:05:57
news-image

விஷ்வ கலா அபிமாணி 2023 விருது

2023-02-08 12:06:14
news-image

ரின்ஸாவுக்கு 'விஷ்வ கலா அபிமானி' விருது  

2023-02-08 12:07:11
news-image

கராத்தே கலை - அங்கீகாரத்திற்கான வழிமுறை...

2023-02-08 12:07:50
news-image

கண்டியில் சுற்றுலாத்துறையினருக்கு சைக்கிள் சவாரி ஊக்குவிப்பு

2023-02-07 14:43:50
news-image

LMSV, 'Rotary Honda Purudu Championship'சிறுவர்களின்...

2023-02-07 12:17:22
news-image

அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தேர்பவனி

2023-02-07 11:28:05
news-image

'ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா' ஓவியக் கண்காட்சி

2023-02-06 14:34:16
news-image

மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக...

2023-02-06 13:08:25
news-image

சந்தா வாங்காத சங்கம் - சிவி...

2023-02-06 12:56:10
news-image

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா

2023-02-06 11:44:58
news-image

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப்பெருமஞ்ச...

2023-02-06 11:36:18