ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் - சாகர காரியவசம்

By Digital Desk 2

08 Dec, 2022 | 04:30 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்பும் பட்சத்தில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம். எனினும் அதன் எண்ணிக்கை 30 ஆகவே காணப்படும்.

புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் நாட்டுக்கு நன்மையை ஏற்படுத்தக் கூடிய நிபுணத்துவம் மிக்கவர்களாகக் காணப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் வியாழக்கிழமை (டிச. 08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ எமக்கு அதிகாரம் கிடையாது. தேர்தல் ஆணைக்குழுவும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகளுமே தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுப்பர்.

எவ்வாறிருப்பினும் எந்தவொரு தேர்தலானாலும் அதில் போட்டியிடுவதற்கும் , எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.

தற்போது சில தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். நாடு தற்போதுள்ள நிலைமையில் இது பொறுத்தமற்ற செயற்பாடாகும்.

உலகிலுள்ள ஏனைய பல நாடுகள் எம்மை விட கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. எனவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிடம் உரிமைகளை தவறானகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

தற்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையே காணப்படுகிறது.

எதிர்காலத்தில் அதில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எண்ணினால் அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது.

எனவே ஜனாதிபதி விரும்பும் பட்சத்தில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம். எனினும் அதன் எண்ணிக்கை 30 ஆகவே காணப்படும்.

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வேண்மெனில் அதற்கு சிறந்த நிபுணர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். நியமனம் பெறுபவர்களால் நாட்டுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கப் பெற வேண்டும்.

ஆனால் இன்று எமது நாட்டில் மக்கள் பலத்தை மாத்திரம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிலர் எவ்வித பலனும் இன்றி பதவி வகித்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறானவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

3 ஆம் திகதி விசேட கட்சித்...

2023-02-01 22:39:37
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இல்லாதொழிக்கவும் - அமெரிக்கா, பிரிட்டன்,...

2023-02-01 22:38:54
news-image

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் பரிந்துரைகளும் சுயதீர்மானங்களும்...

2023-02-01 22:58:31
news-image

அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர...

2023-02-01 18:44:00
news-image

உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தாது...

2023-02-01 22:59:39
news-image

தேசிய மனித உரிமைகள் செயற்திட்டம் இலங்கை...

2023-02-01 18:46:53
news-image

பாராளுமன்ற குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஆளும்...

2023-02-01 23:00:37
news-image

அதிகரிக்கிறது பெற்றோலின் விலை !

2023-02-01 22:28:16
news-image

வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்திற்கு என்ன நடந்தது...

2023-02-01 22:33:15
news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41