(நெவில் அன்தனி)
கல்வி அமைச்சும் அமைச்சின் விளையாட்டுத்துறை திணைக்களமும் இணைந்து நடத்திய அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் பிரதான நிகழ்ச்சியான மெய்வல்லுநர் போட்டிகளில் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநராக றோயல் கல்லூரியின் நந்துன் பண்டாரவும் அதிசிறந்த பெண் மெய்வல்லுநராக வலல்ல ஏ. ரட்நாயக்க மத்திய கல்லூரியின் தருஷி டில்சாரா கருணாரட்னவும் தெரிவாகினர்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையும் பெண்கள் பிரிவில் வலல்ல ஏ. ரட்நாயக்க மத்திய கல்லூரியும் சம்பியனாகின.
இந்த வருட அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 14 புதிய சாதனைகளும் பெண்கள் பிரிவில் 10 புதிய சாதனைகளுமாக மொத்தம் 24 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் புதிய சாதனையை நிலைநாட்டிய நந்துன் பண்டார, கனிஷ்ட தேசிய சாதனையையும் சமப்படுத்தினார்.
சுப்புன் விராஜ் ரந்தெனியவுக்கு 10 வருடங்களாக சொந்தமாகவிருந்த 13.64 செக்கன்கள் என்ற கனிஷ்ட தேசிய சாதனையை சமப்படுத்தியே நந்துன் பண்டார அதிசிறந்த ஆண் மெய்வல்லுநராகத் தெரிவானார்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 54.22 செக்கன்களில் நிறைவு செய்து புதிய சாதனை படைத்ததன் மூலம் அதிசிறந்த பெண் மெய்வல்லுநராக தருஷி டில்சாரா கருணாரட்ன தெரிவானார்.
இவர் 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் (2:08;16 நி.) சாதனை நிலைநாட்டியதுடன் 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் (3:53.82 நி.) சாதனை நிலைநாட்டிய ரட்நாயக்க அணியிலும் இடம்பெற்றார்.
ஹாட்லி வீரர் மிதுன்ராஜ் புதிய சாதனை
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 45.47 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த பருத்தித்துறை, ஹாட்லி கல்லூரி வீரர் எஸ். மிதுன்ராஜ் புதிய சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவர் ஆண்களுக்கான குண்டெறிதலில் (14.49 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார். முதல் தடவையாக ஈட்டி எறிதலில் பங்குபற்றிய அவருக்கு 4ஆம் இடமே கிடைத்தது.
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 300 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 38.65 செக்கன்களில் நிறைவு செய்த கண்டி திரித்துவ கல்லூரி வீரர் எம். ரிபாய் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இவற்றைவிட மேலும் 18 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
வத்தளை லைசியத்திற்கு 2 சம்பியன் பட்டங்கள்
அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை முதல் தடவையாக ஆண்கள் பிரிவிலும் கலப்பு பிரிவிலும் சம்பியன் பட்டங்களை சுவீகரித்து வரலாறு படைத்தது.
ஆண்கள் பிரிவில் 81 புள்ளிகளையும் கலப்பு பிரிவில்150 புள்ளிகளையும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை பெற்றது.
பெண்கள் பிரிவில் சம்பியனான வல்லல்ல ஏ. ரட்நாயக்க மத்திய கல்லூரிக்கு 122 புள்ளிகள் கிடைத்தது.
14, 16, 18, 20 வயது பிரிவுகளில் மெய்வல்லுநர் போட்டிகள் நடத்தப்பட்டது.
வத்தளை லைசியத்திற்கு 2 சம்பியன் பட்டங்கள்
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மேல் மாகாணம் 1096.5 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனானதுடன் மத்திய மாகாணம் 464.5 புள்ளிகளுடன் உப சம்பியனானது. தென் மாகாணம் (375 புள்ளிகள்) மூன்றாம் இடத்தைப் பெற்றது. வட மாகாணம் 157.5 புள்ளிகளுடன் 7ஆம் இடத்தையும் கிழக்கு மாகாணம் 61 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பெற்றன.
கால்பந்தாட்டத்தில் அதிசிறந்த வீரர், வீராங்கனை இரண்டு விருதுகளும் வட மாகாண பாடசாலைகளுக்கு அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான கால்பந்தாட்டப் போட்டியில் இம்முறை வட மாகாண பாடசாலைகள் ஆதிக்கம் செலுத்தியிருந்தன.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடத்தப்பட்ட 5 வயது பிரிவுகளில் நான்கில் வட மாகாண பாடசாலைகள் சம்பியனாகியிருந்ததுடன் அதிசிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதும் வட மாகாண பாடசாலைகளுக்கே கிடைத்தன.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் சம்பியனான யாழ். புனித பத்திரிசியார் அணியின் முன்கள வீரர் வீ. ரோஹித் அதிசிறந்த விரராகத் தெரிவானர். அவருக்கான சான்றிதழும் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இளவாழை புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியனாகியிருந்தது.
பெண்களுக்கான 17 வயதுக்குட்பட்ட, 20 வயதுக்குட்பட்ட இரண்டு பிரிவுகளிலும் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி சம்பியன் பட்டங்களை சுவீகரித்து வரலாறு படைத்திருந்தது.
20 வயதுக்குட்பட்ட அணியில் மொத்தமாக 9 கோல்களைப் போட்ட மகாஜனாவின் உதவி அணித் தலைவி ஆர். கிரிஷாந்தினி அதி சிறந்த வீராங்கனையாகத் தெரிவானார். அவருக்கான சான்றிதழும் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டி நிறைவில் நடைபெற்ற பரிசளிப்பு வைபத்தின்போதே பல்வேறு விளையாட்டுக்களில் அதிசிறந்த வீர, வீராங்கனைகளாக தெரிவானவர்களுக்கு பணப்பரிசுகள் வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM