சிகரெட்டின் விலை, சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை - சந்திம வீரகொடி

Published By: Digital Desk 2

08 Dec, 2022 | 04:13 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

வரி அதிகரிப்பு ஒட்டுமொத்த மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வரி விதிக்கும் அரசாங்கம் சிகரெட்டின் விலையையும், சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியையும் அதிகரிக்க அவதானம் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச. 08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆனால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் எவ்வித திட்டங்களையும் உள்ளடக்கியதாக காணப்படவில்லை.

வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டுமானால் தேசிய வளங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. தேசிய வளங்களை தனியார் மயப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்காத வகையில் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அரச வருமானத்தை 63 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ளும் அரசாங்கத்தின் இலக்கு வரி அதிகரிப்பை மாத்திரம் மையப்படுத்தியதாக காணப்படுகிறது.

வரி அதிகரிப்பு ஒட்டுமொத்த மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய சேவை மற்றும் தேவைகளுக்கு வரி விதிக்கும் அரசாங்கம் சிகரெட்டின் விலையையும், சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியையும் அதிகரிக்க அவதானம் செலுத்தவில்லை.

வரி செலுத்த வேண்டிய தரப்பினரிடமிருந்து முறையாக வரி அறவீட்டால் நடுத்தர மக்கள் மீது சுமை சுமத்த வேண்டிய தேவை ஏற்படாது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதாரம்,கல்வி ஆகிய துறைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகவே இந்த வரவு-செலவுத் திட்டம் நடைமுறைக்கு சாத்தியப்படாத கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33