2022 இன் சிறந்த நபர் - 'டைம்ஸ்' இதழ் அட்டைப் படத்தில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

Published By: Digital Desk 2

08 Dec, 2022 | 03:53 PM
image

உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை 2022 ஆம் ஆண்டின் சிறந்த நபர் என டைம்ஸ் இதழ் கௌரவித்துள்ளது. அவருக்கு ‘உக்ரேனின் உத்வேகம்’ (The spirit of Ukraine) என்று புகழாரம் சூட்டியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் அரசியல், இலக்கியம், சமூக சேவை முதலானவற்றில் சிறந்து விளங்கும் ஒருவரை, அந்த ஆண்டில் சிறந்த நபராக அட்டைப் படத்தில் வருடத்தின் இறுதியில் டைம்ஸ் இதழ் வெளியிட்டு கௌரவித்து வருகிறது.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த நபராக உக்ரேன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கியை டைம்ஸ் இதழ் தெரிவு செய்துள்ளது.

இதுகுறித்து டைம்ஸ் இதழ் தனது டுவிட்டர் பக்கத்தில், 2022ஆம் ஆண்டின் சிறந்த நபர் ஜெலன்ஸ்கி. அவர் உக்ரேனின் உத்வேகம். ஒரு போர்க்காலத் தலைவராக ஜெலென்ஸ்கியின் வெற்றி, அவரது தைரியத்தை நம்பியிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டைம் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ஃபெல்செந்தல், "இந்த ஆண்டு எடுத்த முடிவு நினைவில் மிகவும் தெளிவானது. உக்ரைனுக்கான போர் ஒருவரில் நம்பிக்கையை நிரப்பினாலும் அல்லது அச்சத்தை நிரப்பினாலும் சரி, ஜெலென்ஸ்கி பல தசாப்தங்களாக நாம் கண்டிராத வகையில் உலகை உற்சாகப்படுத்தினார்" என்று கூறியிருக்கிறார். 

கடந்த ஆண்டுக்கான சிறந்த நபராக எலான் மஸ்க்கை, டைம்ஸ் பத்திரிகை தேர்வு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நேபாளத்தில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து...

2026-03-15 16:39:45
news-image

ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக...

2026-03-15 14:28:17
news-image

பாரிஸில் அமெரிக்கா - சீனா உயர்மட்டப்...

2026-03-15 14:15:47
news-image

அமெரிக்காவுக்கு இராணுவ விமானப் பயண அனுமதியை...

2026-03-15 12:21:03
news-image

உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டி: மெக்சிகோ...

2026-03-15 12:23:18
news-image

ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரித்தானியா உள்ளிட்ட...

2026-03-15 10:46:06
news-image

அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம்...

2026-03-14 13:39:51
news-image

மெட்டாவில் தொழில்நுட்ப மாற்றங்களால் 20 வீத...

2026-03-14 12:33:18
news-image

ஈரான் யுத்தத்திற்கு மத்தியில் ஆசியாவிற்கு எரிசக்தி...

2026-03-14 12:16:00
news-image

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது:...

2026-03-14 13:22:34
news-image

ஈரானிய யுத்தக் கப்பல் மீது தாக்குதல்:...

2026-03-14 13:20:34
news-image

ஈரான் தாக்குதலில் சவுதி விமான தளத்தில்...

2026-03-14 13:00:46