(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச வளங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது பொருளாதார மறுசீரமைப்பிற்கான சிறந்த தீர்வாக அமையாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச. 08) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
செய்துக் கொள்ளப்பட்ட தவறை திருத்திக் கொள்ளாவிட்டால், அது பிறிதொரு தவறாக கருதப்படும். அரசாங்கம் தவறை திருத்திக் கொள்ளவில்லை.
நாடு வங்குரோத்து நிலை அடைந்தமைக்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல், கொவிட் -19 பெருந்தொற்று தாக்கம் ஆகிய காரணிகளினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என ஒருதரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.
எமது அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினாலும், பொருத்தமற்ற பொருளாதார கொள்கையினாலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
உண்மையான காரணிகளை இணங்கண்டு அதற்கு தீர்வு காணாவிட்டால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச வளங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது பொருளாதார மறுசீரமைப்பிற்கான சிறந்த தீர்வாக அமையாது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் நடைமுறைக்கு சாதகமான தீர்மானங்களை எடுக்கவில்லை.
பாடசாலை மாணவர்களின் உபகரணங்களின் விலை பன்மடங்காக அதிகரித்துள்ளது. பாடசாலை மாணவர்களின் கல்வி குறித்து அவதானம் செலுத்தி விலை குறைப்புக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாடசாலை உபகரணங்களுக்கு வரி விதிக்கவில்லை.
இயல்பான காரணிகளினால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. டொலர் பெறுமதி அதிகரிப்பு அனைத்து இறக்குமதி உற்பத்திகளுக்கு தாக்கம் செலுத்தியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM