கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான பெண்கள் வைத்தியரிடம் உண்மையைக் கூறுவதில்லை என காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் வைத்தியர் லக்க்ஷ்மன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
50 சத வீதத்துக்கு அதிகமான பெண்கள் வைத்தியசாலைக்கு வந்தும் அவர்கள் கணவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் தெரிவிக்க விரும்பவில்லை.
காயங்களுடன் வைத்தியசாலைக்கு வரும் பெண்கள் பெரும்பாலும் கீழே வீழ்ந்து காயமடைவதாகக் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள் குடும்ப வன்முறைகளை அதிகம் எதிர்கொள்வதாகவும், தாக்குதலுக்கு உள்ளான கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதுடன் நிறை குறைந்த குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்கள் இரத்தப் போக்கு போன்ற அபாயங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்ற துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM