மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

By Nanthini

08 Dec, 2022 | 03:50 PM
image

மூத்த ஊடகவியலாளரான கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் இன்று வியாழக்கிழமை (டிச. 8) திடீர் சுகவீனம் காரணமாக தனது 73ஆவது வயதில் காலமானார். அன்னாரின் ஜனாஸா தென்னக்கும்புறையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இன்றைய தினமே நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

சேகு அப்துல் காதர் மொஹமட் குவால்தீன் எனும் எம்.எஸ்.குவால்தீன் கண்டி, கெங்கல்லயில் பிரபல வர்த்தகரான மர்ஹும் சேகு அப்துல் காதர் - காதர் பீபி தம்பதியின் புதல்வராவார். 

பின்னர் கண்டி, தென்னக்கும்புறை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டிருந்த இவர் யாழ்ப்பாணத்தில் தமது பாடசாலை கல்வியை நிறைவு செய்தார்.

மிக இள வயதிலேயே சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்தவர், 1966ஆம் ஆண்டு 'தினபதி' பத்திரிகையினூடாக தமது ஊடகப் பயணத்தை தொடங்கினார்.

1970இல் டைம்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட 'ஈழமணி' பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றினார். 

அதனையடுத்து கண்டியில் வெளிவந்த 'செய்தி' என்ற நாளிதழிலும் செய்தியாளராக இயங்கி வந்தவர், வீரகேசரி பத்திரிகையின் கண்டி - செங்கடகல நிருபராக ஊடகப் பணியினை தொடர்ந்தார். 

இந்நிலையில் தென்னக்கும்புர கிராமத்தை சேர்ந்த சித்தி சிபாயாவை 1975இல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் உள்ளனர். 

அதன் பிறகும் இவர் எழுதிய பல சிறுகதைகள், கட்டுரைகள் வீரகேசரி, மித்திரன் பத்திரிகைகளில் பிரசுரமாகி வந்ததோடு, வீரகேசரியின் ஏனைய கிளை வெளியீடுகளிலும் செய்தியாளராக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றியுள்ளார்.

அதேபோல் தினகரன் உட்பட பல பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் பிரதேச நிருபராக இயங்கியுள்ளார்.

இவரது ஊடக சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாக, 2017இல் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இணைந்து நடத்திய ஊடகத்துறைக்கான விருது வழங்கல் விழாவில், 51 வருட ஊடக சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதும் தங்கப்பதக்கமும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

மேலும், 1996இல் இரத்தினதீபம் விருது, 2005இல் மத்திய மாகாண தமிழ்க்கல்வி மற்றும் இந்து கலாசார அமைச்சு வழங்கிய ஊடகத்துறைக்கான சாகித்திய விருது, மாதியசூரி விருது, 2010இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் வழங்கிய விருது மற்றும் கலாபூஷணம் போன்ற விருதுகளை பெற்றார்.

தவிர, கண்டி மனித அபிவிருத்தித் தாபனம் இவரது ஊடக சேவையை பதக்கம் வழங்கி அங்கீகரித்தது.  

இவர் அகில இலங்கை சமாதான நீதவான் மற்றும் பிரதேச முஸ்லிம் விவாகப் பதிவாளர் ஆகிய பதவி நிலைகளையும் வகித்துள்ளார்.

எம்.எஸ்.குவால்தீன் விட்டுச் சென்ற ஊடகப் பணிகளை அவரது மகன்களில் ஒருவரான ஊடகவியலாளரும் ஊடகவியல்  பயிற்றுவிப்பாளருமான K.M.ரசூல் தற்போது செவ்வனே நிறைவேற்றி வருகிறார் என்பது பெருமைக்குரிய விடயம்.

வாழ்நாள் முழுவதும் ஊடகத்துறைக்கு அரும்பணியாற்றி மறைந்த அன்னாரது ஆத்ம அமைதிக்காக பிரார்த்திப்போம்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகம்பம் தாக்கிய பகுதிகளில் வசித்த நான்கு...

2023-02-08 11:43:20
news-image

கல்வியங்காட்டு சந்தை வியாபாரிகள் 13 பேருக்கு...

2023-02-08 11:30:14
news-image

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு,...

2023-02-08 11:05:35
news-image

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை...

2023-02-08 10:47:04
news-image

பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் - பதற்றநிலை

2023-02-08 10:59:33
news-image

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை...

2023-02-08 10:40:35
news-image

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும்...

2023-02-08 09:53:42
news-image

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைக்கும் இன்றைய நிகழ்வை...

2023-02-08 09:12:50
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்...

2023-02-08 08:52:33
news-image

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதத்தினை...

2023-02-08 07:03:10
news-image

வருமான வரியை நீக்குமாறு தெரிவித்து நடத்தவுள்ள...

2023-02-07 17:19:54
news-image

முறை சார்ந்த மீளாய்வு மூலம் அரச...

2023-02-07 17:03:49