இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி வான்கடே மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்கு போட்டி நிறுத்தப்படும் போது 117 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டினை இழந்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் கியோடன் ஜென்னிங்ஸ் 65 ஓட்டங்களையும், ஜோ ரூட் 5 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருவதுடன், அணித்தலைவர் குக் 46 ஓட்டங்களை பெற்றவேளை ஜடேஜாவின் பந்துவீச்சில் ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழந்தார்.

இரு அணிகளுக்கும் இடையில் 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவுபெற்ற நிலையில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.