சைபர் தாக்குதல் - இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் பெரும் ஆபத்து -அமைச்சர் கருத்து

By Rajeeban

08 Dec, 2022 | 12:44 PM
image

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அவுஸ்திரேலியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தல் என சைபர் தாக்குதல்களை உள்துறை அமைச்சர் கிளார் ஓ நெய்ல் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கான புதிய சைபர் பாதுகாப்பு தந்திரோபாயத்தை அறிவித்துள்ள அவர் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அவுஸ்திரேலியா மிகவும் ஆபத்தான மூலோபாய சூழ்நிலையை  எதிர்கொள்கின்றதுஎன குறிப்பிட்டுள்ளார்.

கடந்தகாலங்களில் அவுஸ்திரேலியா மோதலில் ஈடுபடும் வரை அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதில்லை,ஆனால் தற்போது புதிய ஆயுதங்கள் எங்கள் பிரஜைகளின் வாழ்விற்கு புதிய பாதுகாப்பு சவால்களை நாளாந்தம் கொண்டுவருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சைபர் தாக்குதல்கள் எங்கள் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தியுள்ளன,எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை செலுத்தியுள்ளன எங்கள் தனிப்பட்ட விடயங்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளன,என தெரிவித்துள்ள அமைச்சர் எங்கள் வர்த்தகம் ஆராய்ச்சியிலும் இது தாக்கத்தை  செலுத்தியுள்ளது நாங்கள் மிகவும் கடினமான முயற்சிகளில் ஈடுபட்டு கண்டுபிடித்த விடயங்கள் திருட்டுப்போகும் ஆபத்து காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

சைபர் தாக்குதல்கள் எங்கள் ஜனநாயகத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன எங்கள் பல்கலைகழகங்களின் நாடாளுமன்றத்தின் தீர்மானங்களில் அந்நிய சக்திகள் தாக்கம் செலுத்த முயல்கின்றன என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தவறான பிழையான தகவல்களை அவுஸ்திரேலியர்கள் மத்தியில் பரப்புகின்றனர் அவை வைரஸ் போல எங்கள் சமூகத்தில் பரவுகின்றது எனவும் கிளாரே ஓ நெய்ல் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரியாவில் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த கைக்குழந்தை...

2023-02-06 22:00:36
news-image

இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்ட உறவுகளை மீட்பதற்காக...

2023-02-06 21:19:37
news-image

மீட்புபணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை துருக்கியை தாக்கிய இரண்டாவது...

2023-02-06 20:38:26
news-image

சிரியா துருக்கியில் 12 மணித்தியாலங்களின் பின்னர்...

2023-02-06 19:58:52
news-image

துருக்கி பூகம்பத்தினால் துருக்கி, சிரியாவில் 1,470...

2023-02-06 16:48:57
news-image

எனது குடும்பம் முழுவதும் இறந்துவிடும் என...

2023-02-06 16:11:35
news-image

பலஸ்தீனியர்கள் ஐவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர்

2023-02-06 15:15:12
news-image

சீனாவை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸில் அமெரிக்க பாதுகாப்புத்...

2023-02-06 14:55:49
news-image

'காஷ்மீர் ஒற்றுமை தினம்' இந்தியாவே இலக்கு

2023-02-06 15:28:47
news-image

பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர்...

2023-02-06 13:37:11
news-image

அதானி விவகாரம் | நாடு தழுவிய...

2023-02-06 12:53:10
news-image

பிரான்ஸில் வீடொன்றில் ஏற்பட்ட  தீயினால் பெண்ணொருவரும்...

2023-02-06 12:53:14