போதைப்பொருள் பாவனையும் அதன் பல்வகை கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும்: யாழ் பல்கலையில் நாளை கருத்தரங்கு

Published By: Nanthini

08 Dec, 2022 | 01:43 PM
image

(எம்.நியூட்டன்)

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும் தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடத்தும் 'போதைப்பொருள் பாவனையும் அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு நாளை வெள்ளிக்கிழமை (டிச. 9) பிற்பகல் 2 மணிக்கு யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கூவர் அரங்கில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. ஸ்ரீசற்குணராஜா மற்றும் சிறப்பு விருந்தினராக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ. சுரேந்திரகுமாரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதன்போது 'தற்காலத்தில் போதைப்பொருள் பற்றிய நிலவரமும், அது தொடர்பான எமது நடவடிக்கைகளும்' பற்றி வைத்தியர் க.குமரனும், 'மனித உரிமைகளும் போதைப்பொருளுக்கு அடிமையாதலும்' பற்றி முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனும், 'போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பான சட்டம் சார்ந்த ஓர் அறிமுகம்' பற்றி குற்றவியல் நீதிமன்ற நீதவான் அ.அ. ஆனந்தராஜாவும், 'போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் உளவியல் அம்சங்கள்' பற்றி யாழ் போதனா வைத்தியசாலை மனநல வைத்திய நிபுணர் டி.உமாகரனும் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை அச்சு ஊடக கல்வி நிலையத்தின்...

2023-12-01 12:05:59
news-image

மனித உரிமைகள் உலகளாவிய அமைப்பின் இலங்கைக்கான...

2023-12-01 07:36:02
news-image

43 ஆவது தேசிய இளைஞர் விருது...

2023-11-30 15:41:31
news-image

'யாழில் மலையகத்தை உணர்வோம்' : முதல்...

2023-11-30 13:37:28
news-image

59ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் திருமறைக்...

2023-11-30 13:48:41
news-image

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில்...

2023-11-30 12:19:31
news-image

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி...

2023-11-30 11:52:12
news-image

'மலையக வரலாறும் ஈழத்து இலக்கியமும்' :...

2023-11-30 11:23:08
news-image

மலையகம் 200 : "யாழில் மலையகத்தை...

2023-11-30 10:38:00
news-image

மன்னாரில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பாடசாலை...

2023-11-29 18:01:37
news-image

உலகத் தமிழர்கள் கொண்டாடும் கலைஞர் நூற்றாண்டு...

2023-11-29 20:58:03
news-image

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி கொழும்புக் கிளையின்...

2023-11-29 14:27:58