குஜராத்தில் பாஜக, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி, டெல்லி மாநகர சபையை ஆம் ஆத்மி கைப்பற்றியது

By Sethu

08 Dec, 2022 | 12:59 PM
image

இந்தியாவின் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றியுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முதலிடம் பெற்றுள்ளது.

அதேவேளை டெல்லி மாநகர சபையில்   ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியீட்‍டி? 15 வருட பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது,

குஜராத்

குஜராத் சட்டசபைக்கான தேர்தல்கள் கடந்த டிசெம்பர் 1 முதல் 5 ஆம் திகதி வரை நடைபெற்றன. 

182 ஆசனங்களைக் கொண்ட இச்சட்டசபையில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு 92 ஆசனங்கள் தேவை. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது என பெறுபேறுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இதுவரை அக்கட்சி 99 ஆசனங்களையே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குஜராத் வரலாற்றில் பாஜக இம்முறை ஆகக்கூடுதலாக 153 ஆனங்களை வென்றுள்ளது.

இதேவேளை காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளிலேயே வென்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சி 77 ஆசனங்களை வென்றிருந்தது.

கடந்த தடவை 6 ஆசனங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி 6 ஆசனங்களை வென்றுள்ளது. கடந்த தடவை அக்கட்சி ஆசனங்கள் எதையும் வென்றிருக்கவில்லை.

இமாச்சலப் பிரதேசத்தில்...

இமாச்சலப் பிரதேச சட்டசபைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி முதலிடம் பெற்றுள்ளது. தற்போது அங்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் 12 ஆம் திகதி இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. 

68 ஆசனங்களைக் கொண்ட இச்சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு 35 ஆசனங்கள் தேவை. 

இந்நிலையில்,  காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் வென்றுள்ளது. அல்லது முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சி 22 ஆசனங்களையே பெற்றிருந்தது.

கடந்த தடவை 43 ஆசனங்களைப் பெற்று ஆட்சிமைத்த  பாஜக இம்முறை 28 தொகுதிகளில் வென்றுள்ளது அல்லது முன்னிலையில் உள்ளது. 

டெல்லி மாநக சபையில்...

டெல்லி மாநகர சபைக்கான தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியீட்டியுள்ளது.

250 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநகரசபைக்கு கடந்த 4 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. கடந்த தடவை அக்கட்சி 49 உறுப்பினர்களையே பெற்றிருந்தது.

 கடந்த தடவை 181 ஆசனங்களை வென்று ஆட்சியமைத்த பாஜக இம்முறை 104 ஆசனங்களையே வென்றுள்ளது. இதன் மூலம், டெல்லி மாநகர சபையில் 15 வருடகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட...

2023-02-01 17:54:10
news-image

தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட  யுவதியை...

2023-02-01 17:06:10
news-image

ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய ஜோடிக்கு 10...

2023-02-01 14:58:34
news-image

அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த கதிரியக்க கொள்கலன்...

2023-02-01 14:55:18
news-image

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும்...

2023-02-01 12:41:27
news-image

உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக...

2023-02-01 12:16:48
news-image

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன்...

2023-02-01 11:56:05
news-image

சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும்...

2023-02-01 11:54:19
news-image

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தீர்க்கமானது -...

2023-02-01 11:47:11
news-image

'பிபிசி தகவல் போர் நடத்துகிறது' -...

2023-02-01 11:15:02
news-image

உரியில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின் சிந்து...

2023-02-01 11:42:59
news-image

ஜார்கண்ட் மாநிலத்தில் குடியிருப்புக் கட்டடம் தீப்பற்றியதால்...

2023-02-01 11:13:29